Tamil Health Drink Drumstick Tea Benefits : இயற்கை நமக்கு கொடுத்த முக்கிய பலவகையான மரங்களில் முருங்கை மரத்திற்கு முக்கிய இடம் உண்டு. அதீத மருத்துவ குணங்கள் கொண்ட முருங்கை மரத்தில் இருந்து கிடைக்கும், முருங்கை கீரை, முருங்கை பூ, முருங்கை பிசின், முருங்கை காய் எனஅனைத்து பொருட்களும் மனித உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பயன்களை கொடுக்கிறது. இதில் இரத்தம் தொடர்பாக பிரச்சனைகளை முருங்கை கீரை சீர் செய்கிறது. மேலும் மலச்சிக்கல், வயிற்றுப்புண் மற்றும் கண் தொடர்பாக பிரச்சனைகளை தீர்க்கிறது.
மேலும் நீரிழிவு நோயாளிகள் முருங்கைகீரை மற்றும் முருங்கைக்காய் தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்ளும்போது நோயில் இருந்து விடுபட வழி செய்கிறது. முருங்கை கீரை வைத்து தேநீர், சூப் என பல ஆரோக்கிய பாணங்களை தயார் செய்ய முடியும். அதே போல் முருங்கை காய் வைத்து தேநீர் செய்து சாப்பிட்டால் முழு ஆரோக்கியம் கிடைக்கும. இந்த தேநீர் செய் முறையும் மிகவும் எளிமையான செய்முறை அதனால் அதிக நேரம் எடுக்காது.
முருங்கைக்காய் தேநீர் செய்யும் முறை :
முற்றல் இல்லாமல் இளம் முருங்கைக்காய்களை எடுத்து அதனை நன்றாக கழுவி எழுத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு இதனை சிறு சிறு துண்டு துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொள்வும். அதன்பின்னர் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்கவைக்கவும்.
முருங்கைக்காய் சுருங்கி அதன் சாறு நன்கு தண்ணீரில் இறங்கி தண்ணீரின் நிறம் மாறியபின் அதனை இறக்கி வைத்து சுத்தமான நூல் துணியில் வடிகட்டி பின் அந்த நீரை பருகுங்கள். இந்த தேநீரை பருகும்போது, முருங்கைகாயில் உள்ள விட்டமின் சத்துக்கள் நேரடியாக உடம்பிற்குள் செல்கிறது. இதனால் ஆரோககிய நன்மைகள் முழுவதுமான உடலக்கு செல்கிறது.
இதில் கால்சியம், விட்டமின் சி-யும் நிறைந்துள்ளது. இதில் உள்ள இரும்புச் சத்து, உயிர்ச்சத்து, கனிமங்கள் உடலுக்கு நோய் சக்தியை அதிகரிக்கிறது. உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் நச்சு நீக்கியாகவும் பயன்படுகிறது. மேலும் சருமம் மற்றும் தலைமுடி அழகை பராமரிக்க உதவுகிறது. ஆனால் இந்த தேநீரை பருகும் முன் மருத்தவரை கலந்தாலோசிப்பது நல்லது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil