Tamil Health Update Genger Benefits : இந்தியாவில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் முக்கிய பொருட்களில் இஞ்சிக்கு தனி இடம் உண்டு. அதீத மருத்துவகுண்ம் கொண்ட இஞ்சி பல ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. இதனால் சமையலறையில் இஞ்சி இருக்கவேண்டியது கட்டாயம். சமையலுக்கு மணத்தையும், உடலுக்கு ஆரோக்கியத்தையும் கொடுக்கும் ஒரு பொதுவான மூலப்பொருளாக உள்ள இஞ்சி, காலை தேநீரில் சேர்ப்பதில் இருந்து பருப்பு மற்றும் சப்ஜியில் சேர்ப்பது வரை பன்முகத்தன்மை கொண்டது.
மேலும் இதில் ஆன்டிஆக்ஸிடன்ட், பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. அது நமக்குள் இருந்து ஊட்டமளிக்க உதவுகிறது. தவிர, உலர்ந்த இஞ்சி (சுக்கு) பாரம்பரிய மருத்துவ நடைமுறையில் ஒரு பகுதியாக இருந்து வருகிறது.
இந்த உலர்ந்த இஞ்சி தரும் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் உலர்ந்த இஞ்சி பொடி தரும் நன்மைகள்:
இஞ்சியைப் போலவே, உலர்ந்த இஞ்சி செரிமானத்தை அதிகரிக்கவும், எடை குறைக்கவும், தலைவலிக்கு சிகிச்சையளிக்கவும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் மற்றும் பலவகை ஆரோக்கிய நன்மைகளுக்கு உதவும் ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக உள்ளது. தவிர, இது பருவகால குளிர் மற்றும் காய்ச்சலுக்கு நன்மை தரும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
ஆயுர்வேதத்தில் இஞ்சி தூள் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இது இருமல் மற்றும் சளிக்கு சிகிச்சையளிக்க மற்றும் செரிமானத்தை மேம்படுத்த உதவும் அழற்சி எதிர்ப்பு பண்புகளால் நிறைந்துள்ளது. உலர்ந்த இஞ்சி ஒரு விதிவிலக்கான இயற்கை மருந்தாகவும், ஜலதோஷத்தைத் தடுக்கவும் இதில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உடலில் தொற்றுநோய்களைத் தடுக்க உதவுகிறது என்று ஊட்டச்சத்து நிபுணர் ரூபாலி தத்தா கூறியுள்ளார்.
உலர்ந்த இஞ்சி பொடியை எப்படி பயன்படுத்துவது?
உலர்ந்த இஞ்சிப்பொடியை கடா அல்லது தேநீரில் சேர்க்கலாம். ஆனால் இதனை உட்கொள்வதற்கான முக்கியமான வழிகளில் ஒன்று கிராம்பு தூள் மற்றும் உப்புடன் பொடியை கலப்பது. ஒரு நாளைக்கு இரண்டு முறை இந்த கலவையை உட்கொள்வது சளி நிவாரணம் பெற உதவும் என்று வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளனர். ஆனால் இதனை பயன்படுத்துவதற்கு முன்பு உங்கள் தேவைக்கேற்ப துல்லியமான அளவைப் புரிந்துகொள்ள மருத்துவரை அணுகவும்.
உலர் இஞ்சி பொடியை வீட்டில் தயாரிப்பது எப்படி:
உலர் இஞ்சி பொடி எளிதில் கிடைப்பதால் பலருக்கு (மருத்துவ நோக்கத்திற்காக) இது பிடித்தமான தேர்வாக உள்ளது. இது தூள் வடிவில் கிடைக்கிறது, இதனை சேமித்து வைப்பதற்கும் எடுத்துச் செல்வதற்கும் எளிதாக்குகிறது. நீங்கள் அதை வீட்டிலும் செய்யலாம்.
புதிய இஞ்சியைக் கழுவி, உரித்து உலர வைக்கவும். அதன்பிறகு 2-3 நாட்களுக்கு அதை மெல்லிய துண்டுகளாக வெட்டி வைக்கவும். பின்னர் அறை வெப்பநிலையில் மேலும் 4 நாட்களுக்கு உலர விடவும்.
சரியாக காய்ந்ததும், அதை மிக்ஸி அல்லது கிரைண்டரில் கலக்கவும். உலர்ந்த இஞ்சி பொடியை காற்று புகாத பாட்டிலில் சேமிக்கவும். இதனை உங்களுக்குத் தேவையான போதெல்லாம் எடுத்து பயன்படுத்தலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil