மனித உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தும் சரியாக செயல்பட வேண்டும். அப்போது தான் மனிதன் தனது அன்றாக பணிகளை மேற்கொள்ள முடியும். இதில் முக்கியமானது கண். கண்பார்வை சிறப்பாக இருக்க பல்வேறு உணவுகள் இருக்கிறது. ஆனாலும் கண்கள் ஆரோக்கியமான இருக்க சில பயிற்சிகளும் இருக்கிறது.
Advertisment
கண்பார்வை மேமம்படவும், கண்கள் ஆரோக்கியமாக இருக்கவும், இந்த பயிற்சிகளை கட்டாயம் செய்ய வேண்டும். முதலில் தங்களது கட்டை விரலை கண்களுக்கு நேராக நீளமாக நீட்ட வேண்டும். அதன்பிறகு அந்த கட்டை விரலை, மூக்கின் நுனியில் வைக்க வேண்டும். அப்போது கட்டை விரல் இரண்டாக தெரியும். அப்போது தொலைவில் உள்ள பொருளை பார்க்க வேண்டும். இப்படியே 20 முறை செய்ய வேண்டும். இது ஒரு பயிற்சி.
அதன்பிறகு ஐ ரோலிங் என்ற பயிற்சியை செய்யலாம். கண்களை உருண்டுவது போன்று இந்த பக்கம் அந்த பக்கமும் உருட்டலாம். இரு பக்கமும் மாறி மாறி பார்ப்பது, அதன்பிறகு வலது பக்கம் பார்த்துவிட்டு, அடுத்து கீழே பார்த்துவிட்டு, அடுத்து இடது பக்கம் பார்க்கலாம். அதன்பிறகு மேலும் கீழும் வலதும் இடதும் என மாறி மாறி கண்களால் பார்க்கலாம். நடக்கும்போது 8 போடுவது போன்று கண்பார்வையை 8 வடிவில் பார்க்கலாம். இந்த முறை பயிற்சி செய்யும்போது கண்பார்வை மேமம்படும்.
Advertisment
Advertisement
அடுத்து அடிக்கடி கண்களை மூடி மூடி திறக்கலாம். இந்த பயிற்சிகளை 20 முறை செய்யலாம். இப்படி செய்யும்போது கண்பார்வை அதிகரிப்பது மட்டுமல்லாமல், கண்ணீர் சுரப்பையும் அதிகரிக்கும் என்று மருத்துவர் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“