Tamil Health News Update : பொதுவாக இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வீடுகளின் சமையலறையிலும் வெந்தயம் முக்கிய சமையல் பொருளாக பயனபடுத்தப்பட்டு வருகிறது. மருத்துவ குணங்கள் உள்ளடக்கிய வெந்தயம் உடலில் ஏற்படும் பல்வேறு இன்னல்களுக்கு முக்கிய தீர்வாக பயன்படுகிறது. வெந்தயம் மட்டுமல்லாது அதன் இலைகளும் மருத்துவ குணங்கள் கொண்டது. அதன் இலைகள் ஒரு சுவையான உணவையும் பராந்தாவையும் தயாரிக்கப் பயன்படும் அதேசமயத்தில், வெந்தய விதைகள் நீரிழிவு, செரிமான கோளாறுகள் மற்றும் எலும்புகளை வலுப்படுத்துதல் போன்ற பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது.
ஆனால் இந்த விதைகளை எப்போது எடுத்துக்கொண்டால், சிறந்த முடிவுகளைப் பெற முடியும் என்பது பலருக்கும் தெரியாத ஒன்றாக உள்ளது. பொதுவாக ஒரு டீஸ்பூன் வெந்தய விதைகளை காலையில் முதலில் உட்கொள்ள வேண்டும் எனறு பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் அதன் சுவை நீங்கள் உண்பதற்கு கடினமாக இருந்தால் அதை கறி, பருப்பு அல்லது பிற உணவு தயாரிப்புகளில் சேர்த்து எடுத்துக்கொள்ளலாம்.
இது தொடர்பாக கடந்த 2015-ம் ஆண்டு வைட்டமின் மற்றும் ஊட்டச்சத்து ஆராய்ச்சிக்கான சர்வதேச இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின் முடிவில், தினமும் 10 கிராம் வெந்தய விதைகளை சூடான நீரில் ஊறவைத்து சாப்பிடுவதன் மூலம் டைப் -2 நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது. நீரிழிவு நோயாளிகளுக்கு 'மெத்தி தானா (விதைகள்)' நீர் இரத்த சர்க்கரையை குறைக்கும் திறன் கொண்டது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெந்தயம் உட்கொள்ள சிறந்த வழி என்ன?
ஒரு ஸ்பூன் வெந்தய விதைகளை ஒரு கிளாஸ் வெந்நீரில் சேர்த்து சுமார் 10 நிமிடங்கள் ஊற விடவும். சுவைக்காக எலுமிச்சை மற்றும் ஒரு சிட்டிகை தேன் சேர்த்து வடிகட்டி, சூடான தேநீராக பருகலாம்.
இது தொடர்பாக ஃபோர்டிஸ் மருத்துவமனையின் தலைமை உணவியல் நிபுணர் ரிங்கி குமாரியின் கூற்றின்படி
வெந்தயத்தில் உள்ள கரையக்கூடிய நார், அல்லது பொதுவாக மெத்தி தானா என்று அழைக்கப்படுகிறது, இது கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.
இது பெருங்குடல் புற்றுநோய் போன்ற நோய்களைத் தடுக்க உதவுகிறது மற்றும் அமில ரிஃப்ளக்ஸ் அல்லது நெஞ்செரிச்சல், வயிறு மற்றும் மலச்சிக்கலை சமாளிக்க உதவுகிறது.
வெந்தய விதைகளை தவறாமல் உட்கொள்வது நம் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை அழித்து, சுருக்கங்கள் மற்றும் கரும்புள்ளிகளைத் தடுக்கும்.
சுக பிரசவம் மற்றும் கருப்பை சுருக்கத்தையும் தூண்டுகிறது.
வெந்தயக்கீரை சில சமயங்களில் மாவாகப் பயன்படுகிறது, இதன் பொருள் இது துணியில் போர்த்தப்பட்டு, சூடு செய்யப்பட்டு, தோலில் நேரடியாகப் பயன்படுத்தப்படுகிறது, இது உள்ளூர் வலி மற்றும் வீக்கம், தசை வலி மற்றும் நிணநீர் கணுக்களின் வீக்கம் ஆகியவற்றைக் குணப்படுத்தும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil