Tamil Health Update : நாம் கடைகளில் அல்லது சந்தைகளில் இருந்து வாங்கி வரும் காய்கறிகளில் பச்சை சாயம் பூசப்பட்டுள்ளதா என்பதை எளிய முறையில் கண்டறியும் வகையில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
மனித உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு சத்தான உணவுகளை எடுத்தக்கொள்வது மிகவும் அவசியம். அதிக நன்மைகள் தரும் காய்கறிகள் பழங்கள் கீரைகள் ஆகிய உணவுகளை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளும்போது தொற்று நோய் தாக்குதல் மற்றும் பிற நோய்களில் நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள முடியும். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் கடைகள் மற்றும் சந்தைகளில் இருந்து வாங்கி வரும் காய்கறிகள் மற்றும் கீரைகளே நமது ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கும் பொருளாக மாறியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் காய்கறிக்களில் கலப்படம் செய்வது. காய்கறிகள் புதிதுபோன்று இருக்க அதில் மலாக்கிட் பச்சை பூசப்படுகிறது.
மலாக்கிட் பச்சை என்றால் என்ன?
ஒரு ஜவுளி சாயம், மலாக்கிட் பச்சை மீன் ஒரு ஆன்டிப்ரோடோசோல் மற்றும் பூஞ்சை காளான் மருந்தாக பரவலாக பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது மீன் வளர்ப்பில் ஒட்டுண்ணி மருந்தாகவும், உணவு, சுகாதாரம், ஜவுளி மற்றும் பிற தொழில்களில் ஒன்று அல்லது மற்ற நோக்கங்களுக்காக பரவலாக பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது பல்வேறு வகையான மீன் மற்றும் பிற நீர்வாழ் உயிரினங்களில் ஹெல்மின்த்ஸால் ஏற்படும் பூஞ்சை தாக்குதல்கள், புரோட்டோசோவான் நோய்த்தொற்றுகள் மற்றும் வேறு சில நோய்களைக் கட்டுப்படுத்துகிறது. மிளகாய், பட்டாணி மற்றும் கீரை பசுமையான பசுமை போன்ற காய்கறிகளை தயாரிக்க பயன்படுகிறது.
அது ஏன் ஆபத்தானது?
பயோடெக்னாலஜி தகவலுக்கான தேசிய மையத்தின் (NCBI) கருத்துப்படி, சாயத்தின் நச்சுத்தன்மை வெளிப்பாடு நேரம், வெப்பநிலை மற்றும் செறிவு அதிகரிக்கிறது. இது புற்றுநோய், பிறழ்வு, குரோமோசோமால் எலும்பு முறிவு, டெரடோஜெனெசிட்டி மற்றும் சுவாச நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. எம்ஜியின் ஹிஸ்டோபோதாலஜிகல் விளைவுகளில் பல உறுப்பு திசு காயம் ஏற்படுத்துகிறது. இது போன்ற கலப்படம் செய்யப்பட்ட காய்கறிகளை சாப்பிடும்போது உடல்நலக்குறைபாடு ஏற்படும் நிலையில் புற்றுநோய் தாக்கும் அபாயம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
இதனால் நாம் கடைகளில் இருந்து வாங்கி வரும் காய்கறிகளில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதாக என்பதை கவனித்து வாங்குவது முக்கியம். ஆனால் பலரும் காய்கறிகள் மற்றும் கீரைகளை கலப்படம் செய்யப்பட்ட்டிருப்பதை எப்படி கண்டுபிடிப்பது என்று யோசித்துக்கொண்டிருக்கிறார்கள். அப்படி யோசிப்பவர்களுக்கு பச்சைக் காய்கறிகளில் மலாக்கிட் பச்சை கலப்படத்தைக் கண்டறிவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்தியா உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) சமீபத்தில் ட்விட்டரில் ஒரு வீடியோவை வெளியிட்டது.
திரவ பாரஃபினில் நனைத்த பருத்தி துண்டை எடுத்துக் கொள்ளுங்கள்.
அதில் வெண்டைக்காயின் ஒரு சிறிய பகுதியின் வெளிப்புற பச்சை மேற்பரப்பை தேய்க்கவும்
துணியில் எந்த நிற மாற்றமும் காணப்படவில்லை என்றால், அது கலப்படமற்றது.
மாறாக துணி பச்சை நிறமாக மாறினால், அது கலப்படமானது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil