இவ்ளோ சுவையா வேறெங்கும் கிடையாது… காஞ்சிபுரம் இட்லி ஒருமுறை செய்து பாருங்க!

Tamil Health Food : பழமை மற்றும் சுவை மிகுந்த இந்த கோவில் இட்லி உடல் ஆரோக்கியத்திற்கும் பல நன்மைகளை தருவதாக உள்ளது.

Tamil Health Food Update : தமிழகத்தில் பட்டு சேலைகளுக்கு புகழ் பெற்ற முக்கிய இடங்களில் ஒன்று. கஞ்சிபுரம். இங்கு தயாராகும் பட்டுப்புடவைகள் இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. காஞ்சிபுரம் பட்டு என்றாலே பெண்கள் மனதில் ஒருவித புன்னகை பூக்கும் அந்த அளவிற்கு இங்கு தயாரிக்கப்படும் பட்டுசேலை புகழ்பெற்றது. பட்டு சேலைக்கு நிகராக காஞ்சிபுரத்தில் புகழ்பெற்றது காமாட்சி அம்மன் கோவில். இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகளில் இருந்து பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.

அதேபோல் இந்த கோவிலில் அம்மனுக்கு படைக்கப்படும் கோவில் இட்லி பெரும் புகழ்பெற்றது. பழமை மற்றும் சுவை மிகுந்த இந்த கோவில் இட்லி உடல் ஆரோக்கியத்திற்கும் பல நன்மைகளை தருவதாக உள்ளது. 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் எழுந்தருளும், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வரதராஜ பெருமாளுக்கு தினசரி நைவேந்தியமாக இந்த இட்லி படைக்கப்படுவதால் இதற்கு கோவில் இட்லி என்று பெயர்.

சாதாரண இட்லியை விட சுவையும் ஆரோக்கிய நன்மைகளும் நிறைந்துள்ள இந்த இட்லி இரண்டு நாட்கள் வரை கெட்டுப்போகாமல் இருக்கு இருக்கும் என்றும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடும் வகையில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதன் செய்முறை கடினம் என்பதால் இந்த கோவில் இட்லி காஞ்சிப்புரத்தில் அதுவும் பிரபலமான உணவகங்களில் மட்டுமே கிடைக்கும் என்று அப்பகுதியினர் கூறியுள்ளனர்.

மேலும் வெளியில் இட்லி மாவு விற்பனை செய்யும் கடைகள் அதிகம் இருந்தாலும் கோவில் இட்லி மாவு வெளியில் கிடைக்காது அதை சொந்தமாகத்தான் தயாரிக்க வேண்டும்.

காஞ்சிபுரம் கோவில் இட்லி செய்முறை :

பச்சரிசி 2 கிலோ, உளுந்து 2 கிலோ, வெந்தயம் 25 கிராம், இவை மூன்றையும் சேர்த்து 2 மணிநேரம் ஊறவைத்து பின்னர் அரைக்க வேண்டும். அவ்வாறு அரைக்கும்போது மென்மையாக இல்லாமல் ரவை மாதிரி இருக்கும் அளவுக்கு அரைத்துக்கொள்ள வேண்டும்.

அப்படி அரைத்து எடுத்து வைத்துள்ள மாவில், மிளகு 50கி, சீரகம் 50கி, சுக்கு 50கி, பெருங்காத்தூள் 20கி, நெய் உப்பு கருவேப்பிலை சேர்த்து கரைத்து எடுத்துக்கொள்ளவும்.

அதன்பிறகு புட்டு அவிக்கின்ற குழாய் போன்று மூக்கில் குழாயில் மாவை ஊற்றி தண்ணீர் கொத்திக்கின்ற இட்லி குழாயில் வைத்து 2 மணி நேரம் வேகவைக்க வேண்டும். நன்றாக வெந்தபிறகு அதனை வெளியில் எடுக்கலாம். நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள கோவில் இட்லியில் நெய் மற்றும் மிளகு சேர்க்கப்படுவதால், மிகுந்த சுவையுடன் இருக்கும்.

இந்த கோவில் இட்லியை தேங்காய் சட்னி, புதினா சட்னி, நல்லெண்ணெய் சேர்த்த இட்லிபொடி சேர்த்து சாப்பிடலாம். இதனால் சுவை மேலும் அதிகரிக்கும். மேலும் குடும்பத்துடன் சாப்பிடும்போது ஒரு இட்லியை 4 பேர் சாப்பிடலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil health food kancheepuram kovil idly making

Next Story
இந்தியாவின் நம்பர்.1 பணக்காரர்… ஆச்சர்யமூட்டும் சில தகவல்கள்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com