காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் நெய்... இவ்ளோ நன்மை இருக்கு!
Tamil Health Update : வெறும் வயிற்றில் நெய்யின் நன்மைகள் பற்றி அறிவியல் சான்றுகள் இல்லை என்றாலும், ஆயுர்வேதத்தின் படி, இந்த நடைமுறை செல் புத்துணர்ச்சி மற்றும் குணப்படுத்துவதற்கு உதவுகிறது
Tamil Health Update : வெறும் வயிற்றில் நெய்யின் நன்மைகள் பற்றி அறிவியல் சான்றுகள் இல்லை என்றாலும், ஆயுர்வேதத்தின் படி, இந்த நடைமுறை செல் புத்துணர்ச்சி மற்றும் குணப்படுத்துவதற்கு உதவுகிறது
Tamil Health Ghee Benefits Update : உடல் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்காற்றும் இயற்கை பொருட்களில் ஒன்று நெய். உணவுக்கு மட்டுமல்லாது பல வகைளில் உடல் ஆரோக்கியத்தில் நன்மை தரும் நெய் ஆரோக்கியமான கொழுப்பாகக் கருதப்படுகிறது. மேலும் சூடான உணவின் மீது சிறிதளவு நெய் விட்டு சாப்பிடும் போது சாப்பாட்டில் சுவை மட்டுமல்லாது பல நன்மைகளையும் கொடுக்கிறது.
Advertisment
நெய் உணவில் எடுத்துக்கொள்ளும்போது சிறுகுடலில் உறிஞ்சுதலை மேம்படுத்துகிறது மற்றும் இரைப்பைக் குழாயின் அமில பிஎச்- ஐ குறைக்கிறது. பசுவின் நெய் ஆக்ஸிஜனேற்றத்தின் இயற்கையான மூலமாக உள்ளது. இது ஆக்ஸிஜனேற்ற செயல்முறையைத் தடுக்கிறது. காலையில் வெறும் வயிற்றில் நெய் குடிப்பது உடலை சுறுசுறுப்பாக வைக்கிறது. நெய் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் ஊட்டச்சத்துக்கான முக்கிய ஆதாரமாகும்.
மேலும், நெய் உயிரணு புத்துணர்ச்சியை மேம்படுத்துகிறது, இது உடலின் குணப்படுத்தும் செயல்முறைக்கு உதவுகிறது. உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. நெய்யில் உள்ள ப்யூட்ரிக் அமிலம் மற்றும் நடுத்தர சங்கிலி ட்ரைகிளிசரைடுகள் உடலில் பிடிவாதமான கொழுப்புகளை வெளியேற்றி நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவுகிறது.
நெய்யுடன் உங்கள் நாளை எப்படி தொடங்க வேண்டும்?
Advertisment
Advertisements
காலையில் ஒரு டீஸ்பூன் பசுவின் நெய்யை வெதுவெதுப்பான நீரில் கலந்து சாப்பிடவும்.
பச்சை மஞ்சளுடன் ஒரு டீஸ்பூன் நெய்யைக் கலந்தும் காய்ச்சி கலவையை தினமும் காலையில் உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் வறட்டு இருமலை குணப்படுத்தவும் உதவுகிறது.
பச்சை மஞ்சள் மற்றும் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து அரைத்து காலை நீரில் கலந்து பானமாக குடிக்கலாம்.
நெய் நமது ஆரோக்கியத்திற்கு அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களை வழங்குதல், நினைவகத்தை மேம்படுத்துதல், வயதான செயல்முறையை தடுக்கிறது, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவது போன் பல நன்மைகளைக் கொண்டுள்ளது. ஒரு நாளைக்கு ஒரு தேக்கரண்டி நெய் நன்மை பயக்கும், ஆனால் இது செயல்பாட்டின் நிலை மற்றும் உடல் எடையைப் பொறுத்து மாறுபடும். வெறும் வயிற்றில் நெய்யின் நன்மைகள் பற்றி அறிவியல் சான்றுகள் இல்லை என்றாலும், ஆயுர்வேதத்தின் படி, இந்த நடைமுறை செல் புத்துணர்ச்சி மற்றும் குணப்படுத்துவதற்கு உதவுகிறது என்று பெங்களூரு ஃபோர்டிஸ் மருத்துவமனையின் மூத்த உணவு நிபுணர் அனுஷ்கா பைந்தூர் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறியுள்ளார்.
ஒரு நாளை நெய்யுடன் தொடங்குவதால் கிடைக்கும் சில நன்மைகள்
இது இயற்கையாகவே மூட்டுகளை உயவூட்டுகிறது மற்றும் எலும்பு மூட்டுகளில் லூப்ரிகண்டுகள் உருவாவதை ஊக்குவிக்கிறது.
இயற்கையான மாய்ஸ்சரைசராக செயல்பட்டு சருமத்தை உள்ளிருந்து பளபளக்க உதவுகிறது.
நெய்யில் தொப்பையைக் குறைக்க உதவும் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் நிரம்பியுள்ளன. ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் இருப்பதால் உடல் கொழுப்பை குறைக்க உதவுகிறது.
தூக்கமின்மை, மன அழுத்தம் அல்லது அதிக வேலை உங்கள் கண்களைச் சுற்றி கருவளையங்களை விட்டுவிடலாம். சிறிது நேரத்தில் அவற்றைக் குறைக்க நெய்யைத் தூங்கும் முன் கண்களைச் சுற்றி லேசாக தடவ வேண்டும்.
நெய்யில் கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்துள்ளது, இது உலர்ந்த மற்றும் உதிர்ந்த முடிக்கு சிறந்த கண்டிஷனராக அமைகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil