உடலுறவுக்குப் பின் கால்களை 10 - 15 நிமிடம் இப்படி வைக்கக் கூடாது: எச்சரிக்கும் டாக்டர் ஐசக் அப்பாஸ்
விரைவில் கர்ப்பமாக பெண்கள் அதிகம் முயற்சிக்கும் ஒரு வழிமுறை, தாம்பத்திய உறவு முடிந்தவுடன், இரு கால்களையும் மேலே தூக்கி 10-15 நிமிடங்கள் இருப்பது. இவ்வாறு இருந்தால் விந்தனு வெளியேறாமல் விரைவில் கர்ப்பபை சென்று கரு உருவாகும் என்று நினைக்கிறார்கள்.
விரைவில் கர்ப்பமாக பெண்கள் அதிகம் முயற்சிக்கும் ஒரு வழிமுறை, தாம்பத்திய உறவு முடிந்தவுடன், இரு கால்களையும் மேலே தூக்கி 10-15 நிமிடங்கள் இருப்பது. இவ்வாறு இருந்தால் விந்தனு வெளியேறாமல் விரைவில் கர்ப்பபை சென்று கரு உருவாகும் என்று நினைக்கிறார்கள்.
புதிதாக திருமணம் செய்துகொண்ட ஜோடிகள், உடனடியாக கர்ப்பம் தரிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஒரு சில ஜோடிகள், சில ஆண்டுகள் கழித்து குழந்தை பெற்றுக்கொள்வோம் என்று கர்ப்பத்தை தள்ளிப்போடுவார்கள். உயிரினங்கள் அனைத்திற்கும் தாம்பத்தியம் என்பது பொதுவானது தான். இதில் மனிதன் மட்டும் விதிவிலக்கு அல்ல. ஆனால் மற்ற உயிரினங்களை போல் மனிதன் கரு தரிப்பது சுலபம் அல்ல.
Advertisment
சிலருக்கு உடனடியாக கர்ப்பம் தரிக்கும். ஒரு சிலர் திருமணம் முடிந்தவுடன் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்யது செயல்பட்டாலும், அவர்களுக்கு உடனடியாக கரு தரிப்பதில்லை. இதனால் தங்களுக்கு ஏதேனும் பிரச்னை இருக்குமோ என்று நினைத்து மருத்துவரிடம் செல்கிறார்கள். இன்னும் சிலர் தாம்பத்திய உறவு முடிந்தவுடன், சில வேலைகளை செய்தால் உடனடியாக கரு உருவாகும் என்று நினைத்து அந்த செயலில் ஈடுபடுகிறார்கள்.
அந்த வகையில் பெண்கள் அதிகம் முயற்சிக்கும் ஒரு வழிமுறை, தாம்பத்திய உறவு முடிந்தவுடன், இரு கால்களையும் மேலே தூக்கி 10-15 நிமிடங்கள் இருப்பது. இவ்வாறு இருந்தால் விந்தனு வெளியேறாமல் விரைவில் கர்ப்பபை சென்று கரு உருவாகும் என்று நினைக்கிறார்கள். ஆனால் இது தவறானது என்று டாக்டர், ஐசக் அப்பாஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், விந்தனுக்கள் புவிஈர்ப்பு விசையினால் கீழே வழிந்துவிடாது. விந்தனுக்கு தலை, உடல் வஜலம் என்ற அற்புத வால் உள்ளது.
வஜலம் என்ற வாலினை கொண்டு, சிறப்பாக நீந்தி எப்போதும் மேல்நோக்கியே செல்லும். விந்தனுக்கள் நிமிடத்திற்கு சுமார் 1-4 மில்லி மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. பல விந்தனுக்கள் சில நிமிடங்களிலேயே, ஃபலோபின் குழாயை அடைந்துவிடுகிறது. எனவே உடலுறவுக்கு பின் யோனியில் இருந்து வெளியாகும் விந்து திரவத்தினை பார்த்து, வருத்தப்பட வேண்டாம். பெரும்பாலும் வருவது விந்து திரவதே தவிர அதில் இருக்கும் விந்தனுக்கள் அல்ல.
Advertisment
Advertisements
அதேபோல் உடலுறவுக்கு பின் யூட்ரன் தசைகள் நன்றாக சுருங்கி விரிந்தும், அந்த விந்தனுக்களை மேலே இழுத்துக்கொள்ளும். அதனால் இவற்றை செய்து மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டாம் என்று கூறியுள்ளார்.