எனர்ஜி, இம்யூனிட்டி… நீரில் ஊறிய உலர் திராட்சையில் இவ்ளோ பயன் இருக்கு!

Tamil Health Update : திராட்சையில், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகளவில் நிறைந்துள்ளது

Tamil Health Update : மனித உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதில் திராட்சைக்கு முக்கிய பங்கு உண்டு.  அற்புதமான சத்துக்கள் நிறைந்த திராட்சை முழுதாகவோ அல்லது உலர்ந்த நிலையிலோ எடுத்துக்கொள்ளலாம். மேலும் இதனை பச்சையாவோ அல்லது சமையல், பேக்கிங் என பல வழிகளில் எடுத்துக்கொள்ளலாம். உலகம் முழுவதும் உற்பத்தி செய்யப்பட்டு பல்வேறு பெயர்களில் அறியப்படும் திராட்சை பச்சை, கருப்பு, பழுப்பு, நீலம், ஊதா மற்றும் மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு நிறங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவில், திராட்சை ‘கிஷ்மிஷ்’ என்று அழைக்கப்படுகிறது.

கலோரிகள் மற்றும் சர்க்கரையின் வடிவத்தில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், தாதுக்கள் மற்றும் ஆற்றலின் முக்கிய ஆதாரமாக இருக்கும் திராட்சையில், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகளவில் நிறைந்துள்ளது. இயற்கையாகவே இனிப்பு மற்றும் கலோரிகள் அதிகம் கொண்ட திராட்சை, அளவாக சாப்பிடும் போது நம் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும். திராட்சை செரிமானத்திற்கு உதவும், உடலின் இரும்பு அளவை அதிகரிக்கவும், எலும்புகளை வலுவாக வைத்திருக்கவும் உதவும்.

பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ள திராட்சை பிசினை, இரவில் தண்ணீரில் ஊறவைத்து பின்னர் சாப்பிடுவது மேலும் ஆரோக்கியமானது. ஊறவைத்த பிசின் சாப்பிடுவதன் சில ஆரோக்கிய நன்மைகள்:

எடை குறைப்புக்கு உதவும்

திராட்சையில் இயற்கையாக சர்க்கரை நிறைந்துள்ளன மற்றும் கலோரிகளை உட்கொள்ளாமல் உடல் அதன் பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே, இது உங்கள் எடை குறைப்புக்கு முக்கிய ஆதாரமாகவும், நீண்ட காலத்திற்கு உங்களை உடலின் ஆற்றலை முழுமையாக உணர வைக்கும்.

இரத்த சோகையை குணப்படுத்த உதவும்

ஊட்டச்சத்துக்கள் அதிகளவு நிறைந்துள்ள திராட்சையில், அதிக அளவு இரும்பு சத்து மற்றும் வைட்டமின் பி- உள்ளன, அவை இரத்த சோகையை குணப்படுத்தும். மேலும், திராட்சையில் உள்ள தாமிரம் சிவப்பு இரத்த அணுக்கள் உற்பத்திக்கு உதவுகிறது.

செரிமானத்திற்கு உதவுகிறது

திராட்சையில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதனால் நீங்கள் அவற்றை தண்ணீரில் ஊறவைக்கும் போது அவை இயற்கையான மலமிளக்கியாக செயல்படுகின்றன. ஊறவைத்த திராட்சையை சாப்பிடுவது மலச்சிக்கல் மற்றும் குடல் இயக்கத்தை சீராக்க உதவும். இது சிறந்த செரிமான அமைப்பை ஏற்படுத்தும்.

இரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது

திராட்சையில் பொட்டாசியம் அதிகளவு நிறைந்துள்ளது, இது உங்கள் உடலில் உள்ள உப்பின் அளவை சமநிலைப்படுத்தி, இரத்த அழுத்தத்தை சீராக்க உதவும். அவை இரத்த நாளங்களின் உயிர் வேதியியலை சாதகமாக மாற்றக்கூடிய ஆக்ஸிஜனேற்ற உணவு நார்ச்சத்துக்கான நல்ல ஆதாரமாகும், இதனால் இரத்த அழுத்தத்தை குறைக்கலாம்.

எலும்பு ஆரோக்கியத்திற்கு நல்லது

எலும்பு உருவாவதற்கு போரோன் மிகவும் முக்கியமானது. இது திராட்சையில் அதிக அளவில் உள்ளது. அதிக அளவு கால்சியம் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. தினமும் உலர்ந்த திராட்சையை சாப்பிடுவது எலும்புகளை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வைத்திருக்க உதவுகிறது.

வாய் துர்நாற்றத்தை தடுக்கிறது

திராட்சையில் பல பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இந்த பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் வாய்வழி சுகாதாரத்தை பராமரிக்கவும், வாய் துர்நாற்றத்தை போக்கவும் உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

திராட்சையில் வைட்டமின் பி மற்றும் சி நிறைந்துள்ளது. அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளதால், காய்ச்சல், தொற்று மற்றும் பல வகையான நோய்களிலிருந்து உங்களைக் காப்பாற்றுகின்றன.

ஆற்றலை வழங்குகிறது

திராட்சையில் உள்ள இயற்கையான பிரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் அதிக அளவு ஆற்றலை வழங்க உதவுகின்றன. அளவோடு சாப்பிட்டால், அவை பலவீனம் மற்றும் எடை அதிகரிப்பையும் தடுக்க உதவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil health grapes and dry grapes benefites update

Next Story
சரியான தூக்கமே இல்லையா? இந்த ஐந்து விஷயங்களை முயற்சி செய்து பாருங்கள்!Good nights sleeping health skincare Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com