Tamil Health Lung Cancer Awareness Update : பருவநிலை மாறும்போது தொற்று நோய் அதிகரிப்பது பொதுவாக நடைபெறும் ஒரு நிகழ்வு. இதில் குறிப்பாக தென்னிந்தியாவில் 3 பருவ நிலைகளும், ஏறக்குறைய சரிசமமாக மாறி வரும் நிலையில், வட இந்தியாவில் குளிர்காலம் அதிக அளவில் நிலை கொண்டிருக்கும். இந்த குளிர்காலத்தை வென்று காட்டுவது அவர்களுக்கு பெரிய சவாலாகவே உள்ளனது. மேலும் குளிர்காலம் பொதுவாக மாறுபாட்டிற்கு ஏற்றதாக இருக்கும்.
குளிர்காலங்களில் புகை மற்றும் மூடுபனி மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதிக்கும். அடர்த்தியான போர்வை போன்ற புகை மூட்டம் நீண்ட நேரம் இருப்பது பல உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். குறிப்பாக அடர்ந்த புகை நுரையீரல் புற்றுநோய் அதிகரிப்பை ஊக்குவிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். இதனால் குளிர்காலத்தில் நாம் விழிப்புணர்வுடன் இருப்பதும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதும் அவசியமாகும்.
மாசுபாடு குறிப்பாக நுரையீரலை எவ்வாறு பாதிக்கிறது?
பெங்களூரு ரிச்மண்ட் சாலையில் உள்ள ஃபோர்டிஸ் லா ஃபெம் மருத்துவமனையின் மருத்துவ புற்றுநோயியல் மற்றும் ஹீமாடோ-ஆன்காலஜி இயக்குனர் டாக்டர் நித்தி ரைசாடா கூறுகையில், நுரையீரல் புற்றுநோய் புகையிலை புகைப்பழக்கத்துடன் தொடர்புடையது."துகள் மாசுபாடு என்பது அமிலங்கள், கரிம இரசாயனங்கள், உலோகங்கள், மண் மற்றும் தூசி ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு சிறிய துகள் ஆகும். அல்ட்ரா ஃபைன் துகள்கள் நுரையீரல் வழியாக செல்வது மட்டுமல்லாமல், அவை நம் இரத்த ஓட்டத்தில் எளிதில் நுழைந்து தீங்கு விளைவிக்கும்.
திட மற்றும் திரவ கலவைகளாக உள்ள இவை வாகனங்கள் (நைட்ரேட்டுகள்), மின் உற்பத்தி நிலையங்கள், தொழிற்சாலைகள் (சல்பர் டை ஆக்சைடு) மூலம் பெருமளவில் வெளியேற்றப்படுகின்றன. இது இயற்கையான சூழலாகவும் இருக்கலாம் (ரேடான்). முக்கியமாக, இந்த துகள்களை நம்மால் பார்க்க முடியாததால் காற்று சுத்தமாக இருப்பது போன்று தோன்றலாம், ஆனால் அவை அனைத்தும் புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயங்கள், ”என்று மருத்துவர் குறிப்பிடுகிறார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், இந்த மாசுபாடுகள் புற்றுநோயை மட்டும் உண்டாக்குவதில்லை, "அதிகரித்த இருதய/இஸ்கிமிக் இதய நோய் மாரடைப்பு மற்றும் பக்கவாதம், குழந்தைகளிடையே இறப்பு அதிகரிப்பு, ஆஸ்துமா மற்றும் சிஓபிடி (நாட்பட்ட தடுப்பு நுரையீரல் நோய்) ஆகிய நோய் தாக்குதலுக்கு முக்கிய காரணமாக இருக்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது" மேலும் இந்த மாசுபாடுகள் குறுகிய கால வெளிப்பாடு கூட நுரையீரல் புற்றுநோயை ஏற்படுத்தும் என்றும் மருத்துவர் எச்சரித்துள்ளார்
இதை சமாளிக்க என்ன நடவடிக்கைகள் எடுக்க முடியும்?
"பெரிய நகரங்களின் மாசுபாட்டிலிருந்து நாம் விடுபட முடியாமல் போகலாம், ஆனால் உடற்பயிற்சிக்காக வெளியில் செல்லும்போது, மாசுபடுத்தும் வாகனங்கள் இருக்கும் பாதைகளில் இருந்து விலகி இருப்பது நல்லது. பூங்காவைத் தேர்ந்தெடுப்பது நல்லது. இதேபோல், புகைபடிவ எரிபொருள் அடுப்புகளை எரிப்பது, டீசல் ஜெனரேட்டர் புகை போன்ற மாசுபாட்டின் ஆதாரங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும், மேலும் புகைகளுக்கான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் கட்டிடங்களின் உயரத்திற்கு மேலே உள்ள புகை வெளியேற்றங்கள் மூலம் சரியாக வெளியேற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று ”என்று மருத்துவர் அறிவுறுத்துகிறார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.