கொரோனா காலக்கட்டம் வந்ததில் இருந்து பலரும் வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்கும் நிலைக்கு வந்துவிட்டனர். வீட்டில் இருந்து வேலை பார்ப்பது பலருக்கும் எளிமையாக இருந்தாலும் கூட, முதுகுவலி உள்ளிட்ட பிரச்னைகளையும் சந்தித்து வருகின்றனர். அதேபோல், வீட்டில் இருந்து வேலை பார்ப்பதால், உட்கார்ந்த இடத்தில் இருந்தே வேலைகளை முடிக்க வேண்டும் என்று நினைத்து ஓய்வில்லாமல், நாள் முழுவதும் சேரிலேயே அமர்ந்திருக்கும் நிலையும் உள்ளது.
Advertisment
இந்த நிலையில், இருப்பவர்கள், இரவில் தூங்க செல்லும்போது கடுமையான முதுகு வலியால் அவதிப்படும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக நாள் முழுவதும் ஒரு இடத்தில் உட்கார்ந்து வேலை செய்வது பலருக்கும் தற்போது பழகிவிட்ட ஒரு செயல் தான் என்றாலும் கூட, அதனால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து யாரும் யோசிப்பதில்லை. இதனால் தான், முதுகுவலி மற்றும் கை கால்களில் வலி ஏற்படுவதும், இதற்காக வலி நிவாரணி மருந்துகளை தடவுவதும் வாடிக்கையாக உள்ளது.
நாள் முழுவதும் உட்கார்ந்த இடத்திலேயே வேலை பார்ப்பதால் வரும் முதுகு வலியை நமது கால்களை மடக்கி உட்கார்ந்தே சரி செய்யலாம் என்பது பலரும் அறியாத ஒரு தகவல். சேரிலேயே நாள் முழுவதும் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள், முட்டி போட்டு, பின்புறம் குதிகால் படும் படி அமர்ந்தாலே முதுகுவலி உள்ளிட்ட பல பிரச்னைகள் தானாக சரியாகிவிடும். ஒரு நிமிடம் முதல் உங்களால் எவ்வளவு நிமிடங்கள் முடியுமே அவ்வளவு நிமிடங்கள் அதே மாதிரி அமர்ந்தால், முதுகுவலி என்பது இருக்காது என்று டாக்டர் கார்த்திகேயன் கூறியுள்ளார்.