Tamil Lifestyle How Increase Body Immunity :மனிதன் ஆரோக்கியமாக வாழ உணவு இன்றியமையாதது. தினசரி கட்டாயம் 3 வேளை உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் மதிய ஒருவேளை விட்டாலும், காலை மற்றும் இரவு என இரண்டு வேளையும் தவறாமல் உணவு உட்கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில், இரவு உணவு சாப்பிடவில்லை என்றால், உடலுக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைக்காமல் தூங்கமின்மை போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதில் இரவு முழுவதும் உணவின்றி உறங்கி கிடக்கும் உடலுக்கு தேவையாக சக்தியை கொடுப்பது காலை உணவு.
காலை நேரத்தில் நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவு எந்த அளவிற்கு ஆரோக்கியமாக உள்ளதோ அந்த அளவிற்கு நாள் முழுவதும் உங்களது உடல் சுறுசுறுப்பாக இயங்கும். மேலும் உடல் ஆரோக்கியத்திற்கு தினசரி 8 மணி நேர தூக்கமும் கட்டாயம். இதுவே உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு முக்கிய வழியாகும். இதில் முக்கியம் என்று கூறப்படும் காலை உணவை ஆரோக்கியமானதாக எடுத்துக்கொள்வது கட்டாயம். காலை உணவு ஆரோக்கியமானதாக இருக்கும்போதுதான் உடலுக்கு தேவையான நோய்ஏதிர்ப்பு சக்தியை கிடைக்க செய்யும்.
இதில் காலை உணவுகளை திரவமாக எடுத்துக்கொள்ளும்போது அதில் சிறப்பான நன்மைகள் கிடைக்கும். உடல் எடையை குறைக்கவும் நோய்ஏதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும். அந்த வகையில் காலையில் உணவாக எடுத்துக்கொள்வதால் உடலுக்கு தேவையாக ஊட்டச்சத்து மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திரவ பாணங்கள் குறித்து பார்ப்போம்
ஆப்பிள் சைடர் வினிகர்
ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்க வேண்டும். இந்த திரவம் உடலில் கொழுப்புகளை குறைக்க உதவும். உடலில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்.
நெல்லிக்காய் சாறு
ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவது 3 ஆப்பிளுக்கு சமம் என்று கூறுவார்கள். அதற்கு ஏற்ப மருத்துவ குணங்கள் நிறைந்த நெல்லிகாயில் இருந்து எடுக்கப்பட்ட சாறு பல நான்மைகளை கொடுக்கிறது. ஒரு கிளாஸ் தண்ணீரில் இரண்டு தேக்கரண்டி நெல்லி சாறு சேர்த்து வெறும் வயிற்றில் குடிக்கவும். நெல்லி சாறு உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
தேன் எலுமிச்சை நீர்
உடல் எடை குறைப்புக்கு தேன் ஒரு முக்கிய உணவாக பயன்படுகிறது. ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு எலுமிச்சை மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் சேர்க்க காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். எலுமிச்சை தேன் உடல் எடை குறைக்கும் பண்புகளை கொண்டுள்ளது. மேலும் ஆக்ஸிஜனேற்ற மற்றும் வயதான தோற்றத்தை மாற்றவும், சருமத்திற்கு அதிகப்படியான நன்மைகளையும் தருகிறது.
சீரக நீர்
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வேண்டும் என்றால் சீரக நீர் உங்களுக்கு பெரிய பயனை கொடுக்கும். ஒரு தேக்கரண்டி ஜீராவை இரவில் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் கொதிக்க வைத்து, வெறும் வயிற்றில் இந்த பானத்தை குடிக்க வேண்டும். இந்த நீர் நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாக வைக்கும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.