scorecardresearch

முருங்கை இலை, நெய், வெங்காயம்… ஹீமோகுளோபின்- ஆக்சிஜன் அளவு அதிகரிக்க 3 சிம்பிள் ரெசிபி

Tamil Lifestyle Update : சத்தான உணவை எடுத்துக்கொள்ளும்போது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நோய் தொற்றுக்கள் தாக்கம் குறைவாக இருக்கும்

Tamil Health Update : ஒவ்வொரு மனிதனுக்கும் உடல் ஆரோக்கியம் என்பது இன்றியமையாத ஒரு தேவை. இந்த தேவையை பூர்த்தி செய்வதற்கு சத்தான உணவு பொருட்களை எடுத்துக்கொள்ளவேண்டியது கட்டாயம். சத்தான உணவை எடுத்துக்கொள்ளும்போது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அப்போது நமது உடலில் நோய் தொற்றுக்கள் தாக்கம் குறைவாக இருக்கும். உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு உடலில் உள்ள  ஹீமோகுளோபின் எண்ணிக்கை சரியாள அளவில் இருக்க வேண்டும். இந்த எண்ணிக்கை குறைவும் பட்சத்தில் உடலில் பலவகை சுகாதாரத சீர்கேடுகள் வர தொடங்கும்

ஹீமோகுளோபின் (Hb) குறைவதற்கு இரத்த சோகை காரணமாக இருக்கலாம். இது பெரும்பாலும் பெண்களுக்கே அதிகம் இருக்க வாய்ப்புள்ளது.  ஆனால் சில உணவு மாற்றங்களைச் செய்வதன் மூலம் ஹீமோகுளோபின் அளவை சரியான எண்ணிக்கையில் வைக்க முடியும். இது குறித்து ஆயுர்வேத பயிற்சியாளர் டாக்டர் ஐஸ்வர்யா சந்தோஷ் ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்த உதவும் மூன்று சமையல் குறிப்புகளை பரிந்துரைத்துள்ளார்.

ஹீமோகுளோபின் என்பது அனைத்து சிவப்பு இரத்த அணுக்களிலும் (RBCs) காணப்படும் இரும்புச்சத்து கொண்ட புரதமாகும், இது செல்கள் அவற்றின் சிறப்பியல்பு சிவப்பு நிறத்தை அளிக்கிறது. ஹீமோகுளோபின் நுரையீரலில் இருந்து ஆக்ஸிஜனை உடலின் திசுக்கள் மற்றும் உறுப்புகளுக்கும், திசுக்களில் இருந்து கார்பன் டை ஆக்சைடை மீண்டும் நுரையீரலுக்கும் கொண்டு செல்கிறது.

ஹீமோகுளோபின் உடலில் இருக்கவேண்டிய சாதாரண வரம்பு

வயது வந்த ஆண்கள்: 14 முதல் 18 கிராம்/டிஎல்

வயது வந்த பெண்கள்: 12 முதல் 16 கிராம்/டிஎல்

ஹீமோகுளோபின் குறைவதற்கு காரணங்கள் என்ன?

மிகவும் பொதுவான காரணம் இரத்த சோகை. இரத்த இழப்பு, காயம், இரைப்பை புண், இரத்தப்போக்கு குவியல்கள், அதிக மாதவிடாய் இரத்தப்போக்கு ஆகியவை மற்ற காரணங்கள்

ஊட்டச்சத்து குறைபாடுகள்

கதிர்வீச்சு, கீமோதெரபி, மருந்துகள் போன்றவற்றால் எலும்பு மஜ்ஜைக்கு சேதம் ஏற்படும் மேலும் சிறுநீரக செயலிழப்பு எலும்பு மஜ்ஜை கோளாறுகள், இரத்த சோகையின் அறிகுறிகள்பலவீனம் அல்லது சோர்வு ஆற்றல் பற்றாக்குறை, மயக்கம். பல்லர், மூச்சு திணறல் வேகமான அல்லது ஒழுங்கற்ற இதய துடிப்பு குளிர்ந்த கைகள் அல்லது கால்கள்

டாக்டர் சந்தோஷின் கருத்துப்படி, இந்த பிரச்சனைகளுக்கு உதவக்கூடிய மூன்று எளிய வைத்தியங்கள் உள்ளன.

முருங்கை இலைகளை தோரணம்

தேவையான பொருட்கள்

முருங்கை இலைகள் – அரை கப்

நெய் – ½ தேக்கரண்டி –

வெங்காயம் – 3

கல் உப்பு – தேவையான அளவு

செய்முறை

நெய்யை சூடாக்கி, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும் முருங்கை இலைகள் மற்றும் கல் உப்பு சேர்த்து சில நிமிடங்கள் வேகவைத்து சாப்பிடலாம்.

திராட்சை-பேரீட்சம்பழ பானம்

தேவையான பொருட்கள்

10 – திராட்சை

5 – பேரீட்சம்பழம்

செய்முறை

பேரீட்சம்பழம் மற்றும் திராட்சையை இரவில் ஊற வைக்கவும் எல்லாவற்றையும் பிழிந்து காலையில் இதை குடிக்கவும்

ஏபிசி ஜூஸ்

தேவையான பொருட்கள்

ஆம்லா – ¼ கப் –

பீட்ரூட் – 1 கப்

கேரட் – 1 கப்

தண்ணீர் – 1 கப்

செய்முறை

எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து குடிக்கவும்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Tamil health improve bodyhaemoglobin count tips