Tamil Health Update : உலகளவில் சமையல் பொருட்களில் அதிக மருத்துவ குணம் கொண்ட பொருட்கள் இந்தியாவில் பயன்படுத்தப்படுகின்றன. சமையல் பொருட்களில் உள்ள மருத்துவ குணத்தை பயன்படுத்தி பலவைகையாக நோய்களை குணப்படுத்தலாம் என்று பல ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான இந்திய மசாலா கருப்பு சீரகம் அற்புத நன்மைகளை அளிக்கிறது. கருஞ்சீரகம் மற்றும் பாலில் செய்யப்பட்ட ஒரு மசாலா பானம் பல உடல்நலக் கோளாறுகளையும் நோய்களையும் குணமாக்கும் என்பது பலரும் அறியாத உண்மை.
இந்த மசாலாப்பால் குடிப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் :
மூளையின் ஆரோக்கிய மேம்பாடு
பால் மற்றும் கருஞ்சீரகப்பொடியுடன் செய்யப்பட்ட மசாலா பானம் மன ஆரோக்கியத்தையும் மூளையின் செயல்பாட்டையும் மேம்படுத்தும். இந்த மசாலாவில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட், நியூரான்-பாதுகாக்கும் பண்புகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மூளையின் செயல்பாட்டை அதிகரிக்க சிறப்பானதாக ஆக்குகிறது என்பது ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் பாலில் ட்ரிப்டோபன் மற்றும் மெலடோனின் இருப்பது நரம்புகளை பாதிப்புகளை குணப்படுத்த உதவுகிறது. தூக்கத்தை தூண்டுகிறது.
எடை குறைப்புக்கு உதவும்
கருஞ்சீரகம் மற்றும் பால் பானத்தை குடிப்பது வளர்சிதை மாற்ற விகிதத்தை மேம்படுத்த உதவுகிறது, மேலும் உடல் எடை உயர்வை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. உங்கள் உணவில் 1-3 கிராம் கருஞ்சீரகத்தை சேர்ப்பது செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவும். உண்மையில், பால் மற்றும் கருஞ்சீரக பொடியின் கலவை வளர்சிதை மாற்ற விகிதத்தை மேம்படுத்தவும் எடை குறைப்பு செயல்முறையை துரிதப்படுத்தவும் உதவும்.
நீரிழிவு நோயை நிர்வகிக்க உதவுகிறது
கருஞ்சீரக விதைகள் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது, இது நீரிழிவு நோயை நிர்வகிக்க உதவுகிறது. சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, கருஞ்சீரகம்மற்றும் பால் பானத்தை தொடர்ந்து உட்கொள்வது இன்சுலின் எதிர்ப்பை மேம்படுத்தி நீரிழிவு நோயைத் தடுக்கும்.
இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது
கெட்ட கொலஸ்ட்ரால் அளவை (எல்டிஎல்) குறைக்க கலோஞ்சி உதவுகிறது. கருஞ்சீரக பொடி மற்றும் பாலுடன் ஒரு எளிய மசாலா பானத்தை குடிப்பது ட்ரைகிளிசரைடு அளவைக் குறைக்கவும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது, இது இதய நோய்களின் அபாயத்தை மேம்படுத்த உதவுகிறது.
வலி மற்றும் வீக்கத்தை குணப்படுத்துகிறது
இந்த சமையலறை மசாலா உடல் மற்றும் மூட்டு வலிக்கு சிறந்தது, ஏனெனில் அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நாள்பட்ட வீக்கத்தை குணப்படுத்தும். ஆயுர்வேதத்தின்படி கூட, ஒரு கப் வெதுவெதுப்பான பால் மற்றும் கலோஞ்சி குடிப்பது அல்லது கலோஞ்சி எண்ணெயைப் பயன்படுத்துவது மூட்டு வலியைக் குறைத்து உடலில் வீக்கத்தைக் குறைக்கும்.
சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்துகிறது
இரத்த சர்க்கரை, சீரம் கிரியேட்டினின் மற்றும் இரத்த யூரியா அளவைக் குறைப்பதன் மூலம் சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்த கருஞ்சீரகம் உதவுகிறது. உங்கள் தினசரி உணவில் கருஞ்சீரக பானம் சேர்ப்பதன் மூலம் நீரிழிவு நெஃப்ரோபதியை நிர்வகிக்க உதவும். இருப்பினும், உங்கள் உணவில் இதை சேர்ப்பதற்கு முன் மருத்துவ வழிகாட்டுதலைப் பெற வேண்டும்
கருஞ்சீரக பானம் செய்வது எப்படி?
இந்த எளிய பானத்தை தயாரிக்க, 1 கிளாஸ் பாலை கொதிக்க வைத்து, 1 டீஸ்பூன் கருஞ்சீரக பொடியை சேர்க்கவும். சுவையை அதிகரிக்க, நீங்கள் ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் ஒரு சிட்டிகை ஜாதிக்காய் சேர்க்கலாம். இந்த பானம் உடல் எடையை குறைக்க அல்லது உடலில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் இந்த மசாலா பானத்தில் தேன் அல்லது சர்க்கரை சேர்ப்பதைத் தவிர்ப்பது நல்லது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil