Advertisment

ரெகுலராக பால் சாப்பிட்டால் சளி பிடிக்குமா? ஆய்வுகள் கூறுவது என்ன?

Tamil Lifestyle Update : தொண்டை புண் அல்லது சளி தொல்லை இருக்கும் நேரத்தில், பால் மற்றும் பால் பொருட்களை உட்கொள்ள வேண்டாம் என்று பலர் கூறுவது உண்டு.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ரெகுலராக பால் சாப்பிட்டால் சளி பிடிக்குமா? ஆய்வுகள் கூறுவது என்ன?

Tamil Health Update Milk : மூக்கடைப்புக்கு, கண்களில் தண்ணீர், தலைவலி, காய்ச்சல் இவை அனைத்தும் நம் வாழ்கையில் அனைத்து சூழ்நிலைகளிலும் சந்திக்கும் ஒரு சங்கடமான நிலையாகும். அந்த நேரத்தில் பசி எடுத்தாலும், எதையும் சாப்பிடவோ அல்லது குடிக்கவே விருப்பம் இருக்காது. சரியான ஊட்டச்சத்து உள்ள உணவுகளை சாப்பிடும்போது இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

Advertisment

அதிலும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் வகையில் உணவை எடுத்துக்கொள்வது நல்லது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை புதுப்பிக்க முயற்சிக்கும்போது, ​​ தொண்டை புண் அல்லது சளி தொல்லை இருக்கும் நேரத்தில், பால் மற்றும் பால் பொருட்களை உட்கொள்ள வேண்டாம் என்று பலர் கூறுவது உண்டு. பால் மற்றும் பிற பால் பொருட்கள் சளி உற்பத்தியை அதிகரிக்கும் என்பது பொதுவான நம்பிக்கை. மேலும் உடலில் காய்ச்சல் அறிகுறிகளை மேம்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

சளி ஒரு நோய் தொற்று. இது உங்கள் மூக்கில் உருவாகி தொண்டைக்குத் திரும்பும் போது உங்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும். உங்களுக்கு சளி இருக்கும்போது நீங்கள் உண்மையில் பாலைத் தவிர்க்க வேண்டுமா? அல்லது அது உண்மை என்று எல்லோரும் நம்பும் கட்டுக்கதைகளில் ஒன்றா? என்பதை இந்த பதிவில் பார்ப்போமா?

அமெரிக்க தேசிய மருத்துவ நூலகம், தேசிய சுகாதார நிறுவனங்களுக்காக வயது வந்த 60 தன்னார்வலர்களிடம் மேற்கொண்ட ஆய்வில் பால் உட்கொள்ளுதல் மற்றும் சளி உற்பத்தி ஆகியவற்றுக்கு இடையே எந்த தொடர்பும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் 10 நாட்களுக்கு தன்னார்வலர்களிடம் தினசரி சுவாச அறிகுறிகள் மற்றும் அவர்களின் பால் மற்றும் பால் பொருட்கள் உட்கொள்வது குறித்து பதிவு செய்யப்பட்டது. இதில் பங்கேற்பாளர்கள் ஒரு நாளைக்கு 11 கிளாஸ் பாலை உட்கொண்டனர். அவர்களில் சிலர் பால் சத்து உற்பத்தியை அதிகரிக்கிறது என்ற நம்பிக்கையை குறைத்துக்கொண்டாக கூறியுள்ளனர். இதனை வைத்து பால் உட்கொள்வதற்கும் நெரிசல் அல்லது நாசி சுரப்பு அறிகுறிகளின் அதிகரிப்புக்கும் இடையே எந்த தொடர்பு இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்தனர்.

உண்மையில், 'பால் சளியை உண்டாக்குகிறது' என்று நம்பி பால் உட்கொள்வதைக் குறைத்தவர்கள் அதிக இருமல் மற்றும் நெரிசல் அறிகுறிகள் இதுப்பதாக கூறியள்ளனர். பால் குடிப்பது கபத்தை தடிமனாக்கலாம் மற்றும் உங்கள் தொண்டையை மேற்பரப்பில் ஒட்டிக்கொள்வதால் எரிச்சல் ஏற்படலாம் என்று காட்டும் பிற முக்கிய ஆய்வுகள் உள்ளன. ஆனால் அது உங்கள் உடலில் அதிக சளியை உற்பத்தி செய்யாது. இந்த ஆலோசனை அநேகமாக ஒரு பொய்யான தகவல் என்பதை நிரூபிக்கும் மற்றொரு ஆய்வு ஜலினாவின் அமெரிக்கன் காலேஜ் ஆஃப் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்டது, இதில் ஜலதோஷ வைரஸால் தனிநபர் தடுப்பூசியைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் பால் உட்கொள்வது அதிகரித்த நாசி சுரப்பு, இருமல் அறிகுறிகள் அல்லது நெரிசல் ஆகியவற்றுடன் தொடர்புடையது அல்ல இருப்பினும், பசுவின் பால் ஒவ்வாமை உள்ளவர்கள் ஆஸ்துமா போன்ற அறிகுறிகளைக் காட்டிய சில நிகழ்வுகளை ஆராய்ச்சியாளர்கள் குழு, ஆவணப்படுத்தியது.

ஆலோசகரான ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் ரூபாலி தத்தா கூறுகையில், "அலோபதி மருத்துவத்தில் இதற்கு எந்த முரண்பாடும் இல்லை. உண்மையில், நீங்கள் ஆண்டிபயாடிக் மருந்துகளை உட்கொண்டால், புரோபயாடிக்குகள் மிகவும் அவசியம். ஹால்டி தூத் போன்ற சூடான திரவங்கள் உங்களுக்கு ஊட்டத்தை அளித்து உங்கள் தொண்டையைத் பாதுகாக்கும். ஆனாலும் ஐஸ்கிரீம் மற்றும் பிற குளிர் பால் பொருட்கள் வயிறு மற்றும் தொண்டையை எரிச்சலூட்டுவதால் அதனை தவிர்க்கப்பட வேண்டும். உங்களுக்கு வசதியாக இருப்பதை உண்ணுங்கள், பால் பொருட்கள் தொடர்பாக கடினமான மற்றும் வேகமான விதிகள் எதுவும் இல்லை. கீர், கஸ்டர்ட் மற்றும் வெதுவெதுப்பான திரவங்கள் நீங்கள் குளிரால் பாதிக்கப்படும்போது ஏற்படுத்தும் தீமையை விட அதிக நன்மைகளைச் செய்யக்கூடும் என கூறியுள்ளார்.

இது குறித்து புதுடெல்லியில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தரப்பில் "நீங்கள் குளிரால் பாதிக்கப்பட்டிருந்தால் பால் பொருட்களை உட்கொள்ளக்கூடாது என்பது பொய்யான தகவல். இருப்பினும், தயிர் மற்றும் பாலை அறை வெப்பநிலையில் உட்கொள்வது நல்லது குளிரால் அவதிப்படும்போது, ​​பால் ஒரு குழம்பாக இருப்பதால், அது உமிழ்நீருடன் இணைந்தால், அது நீர்க்கட்டிகள் எனப்படும் கொத்தாக நீர்த்துளிகளை உருவாக்குகிறது. இது தொண்டையில் அடைத்திருப்பதை உணரச் செய்து, அதிக சளி உள்ளது என்ற எண்ணத்தை அவர்களுக்கு ஏற்படுத்தலாம்.

சளி சவ்வுகள் நமது நுரையீரல், மூச்சுக்குழாய், உணவு குழாய் மற்றும் வயிற்றின் திசுக்களை சேதத்திலிருந்து பாதுகாப்பதாக அறியப்படுகிறது. எனவே, உங்கள் உடலுக்கு பால் தேவை, ஆனால் வைரஸ் தொற்று காரணமாக உங்கள் உடல் கூடுதலாக உற்பத்தி செய்யும் போது உங்களுக்கு சளி இருந்தால். நீராவி எடுப்பது, உப்பு நீரில் வாய் கொப்பளிப்பது மற்றும் சூடான திரவங்களை குடிப்பது அதிகப்படியான சளியை அகற்ற உதவும். ஆனால் பால் பொருட்களை உட்கொண்ட பிறகு நீங்கள் எந்த அசவுகரியமான அறிகுறிகளையும் அனுபவிக்கும் வரை இவற்றை செய்ய வேண்டியதில்லை. மேலும் நீங்கள் எந்த முடிவையும் எடுப்பதற்கு முன் உங்கள் மருத்துவரை அணுகுவத நல்லது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Health Tips Milk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment