புதினாவை கொதிக்க வைத்து, பின் குளிரூட்டி… தகதகன்னு மின்னும் ரகசியம் இதுதான்!

Tamil Lifestyle Update : சமையலுக்கு மணம் மற்றும் சுவையூட்டியாக பயன்படுத்தப்படும் புதினவை சரும அழகிற்கும் பயன்படுத்தலாம்.

Tamil Health Update : அழகு என்பது அனைவரும் விரும்பும் ஒன்று. தனது முகம் மற்றும் உடலை அழகாக வைத்துக்கொள்வதற்காக பலரும பலகையான கிரீம் மற்றும் இதர பொருட்களை பயன்படுத்தி வருகிறனர்.  இதில் தோல் பராமரிப்பு முயற்சி மற்றும் உடல் அழகை பராமறிப்பதற்கு பல தயாரிப்புகளைப் பயன்படுத்துவதை பலரும் பின்பற்றி வருகின்றனர். ஆனால் அவ்வாறு பல வகை கிரீம்கள் பயன்படுத்துவதை விட ஒருவரின் தோல் வகை மற்றும் அதன் பிரச்சனைகளைப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்றாற்போல் கிரீம்களை பயன்படுத்துவது அதிக நன்மை கொடுக்கும்.

இதில் பொதுவாக அனைவராலும் பயன்படுத்தக்கூடிய ஒரு தயாரிப்பு டோனர். இது சருமத்தை ஈரப்பதமாக்கவும், இறந்த செல்களை அகற்றவும் உதவுகிறது. ஆனாவும் கடையில் வாங்கிய டோனர்களைத் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக, நீங்கள் எப்போதும் ஒரு புதிய, கரிம மற்றும் பாதுகாப்பான டோனரை வீட்டிலேயே தயாரிக்கலாம். இது குறித்து பிரபல அழகுகலை நிபுணர், செஜல் கோயல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தேவையான பொருட்கள்

புதினா

தண்ணீர்

செய்முறை

புதினா இலைகளை நன்கு கழுவவும் இலைகளை 1.5 கப் தண்ணீரில் 3-5 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். அதன்பிறகு இலைகளை வடிகட்டி, நீரை ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றவும். அந்த நீரை நன்றாக குளிரூட்டி வைத்துக்கொள்ளவும்.

இதை செய்யும்போது கவனத்தில் கொள்ளவேண்டியவை :

இது பாதுகாப்பற்றது என்பதால், அதை குளிர்சாதன பெட்டியில் சேமிப்பது அவசியம் . இந்த முறையில் இதனை ஐந்து நாட்கள் வரை சேமிக்க முடியும் வித்தியாசமான வாசனை வர ஆரம்பித்தால் அதை விட்டு புதிதாக புதினா நீரை உருவாக்க வேண்டும்

எப்படி பயன்படுத்துவது?

உங்கள் சருமத்தில் காட்டன் பேடால் தடவி, மாய்ஸ்சரைசரைப் பின்பற்றுங்கள். காலை மற்றும் மாலை வழக்கமாக இதைப் பயன்படுத்தலாம்!

பலன்கள்

டோனர் நச்சுத்தன்மையற்றது, ஆர்கானிக், ஜிமோ அல்லாதது, பாராபென் இல்லாதது, ஆல்கஹால் இல்லாதது. இந்த புதினா டோனர் உங்கள் நிறத்தை பிரகாசமாக்கும் மற்றும் நிறமி, கறைகளை மறைக்கும். புதினாவின் தன்மை அதிகப்படியான சருமம் மற்றும் பாக்டீரியாக்களை அகற்றுவதன் மூலம் துளைகளை சுத்தம் செய்வதற்கான சிறந்த டோனராக அமைகிறது “என்று கோயல் குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil health pudina or mint toner benefits for skin

Next Story
அழுகிய மாம்பழம், பனிக்கட்டி, உருகிய ஐஸ் க்ரீம் – உமா ரியாஸ் குட்டி ஃப்ரிட்ஜ் டூர்!Cook with Comali Uma Riyaz Mini Fridge Tour Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express