Lifestyle Update In Tamil : அவசரமான உலகத்தில் இருக்கும் நாம் அனைவரும் இல்லாமல் பல்வேறு பணிகளுக்காக ஓடிக்கொண்டே இருக்கிறோம். இந்த அவசர கதியில் நாம் சத்தான உணவு மட்டுமல்ல பசிக்கு கூட சாப்பிட முடியாத நிலையும் ஏற்படும். சிலர் அவசர நேரத்தில் சமையல் செய்ய லேட்டாகும் என்று சாப்பிடாமல் கூட சென்றுவிடுவார்கள். அப்படி செல்பவர்கள் போதிய ஊட்டச்சத்து கிடைப்பது எட்டாக்கனியாக இருக்கும்.
இன்னும் சிலர் வீட்டில் இட்லி தோசை மாவு இல்லை என்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் பட்டினியுடன் சென்றுவிடுவார்கள் இப்படி செல்பவர்கள் அவசரத்தில் செய்தாலும் சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த ரவை இட்லி செய்து சாப்பிடலாம். இந்த உணவு செய்வதற்கு அதிக நேரம் தேவைப்படாது. இதனால் அவசர நேரத்தில் இந்த உணவை நீங்கள் முயற்சிக்கலாம்.
ரவை இட்லி செய்வது எப்படி?
தேவையான பொருட்கள் :
தயிர் - 1 கப்
ரவை - 1 கப்
தாளிக்க:
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 டேபிள் ஸ்பூன்
கடலை பருப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை , கொத்தமல்லி - கையளவு
செய்முறை :
ஒரு கிண்ணத்தில் தயிரை எடுத்து அதை நன்றாக பிசைந்து அதில், ரவை சேர்த்து நன்றாக கலக்கிக்கொள்ளுங்கள். இந்த கலவை இட்லி மாவு பதத்திற்கு வரும் வரை சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலககவும. அதன்பிறகு அடுப்பில் கடாய் வைத்து தாளிக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து தாளித்து மாவில் கொட்டி மீண்டும் கலக்குங்கள்.
அடுத்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும். அதன்பிறகு இட்லி குக்கர் வைத்து தட்டில் மாவை இட்லிக்கு ஊற்றுவது போல் ஊற்றி வைத்துவிட்டு 10 நிமிடம் கழித்து திறந்து பார்க்கவும். வெந்திருந்தால் இறக்கிவிடவும். இல்லை என்றால் சிறிது நேரம் கழித்து இறக்கவும்.
சுவையான ரவை இட்லி தயார். இதனை தேங்காய் கெட்டி சட்னி புதினா சட்னி ஆகியவைற்றை சேர்த்து சாப்பிடும்போது தனி சுவை கிடைக்கும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil