புற்றுநோயை தடுக்கும் மகத்தான சக்தி… சீரக சம்பாவில் தேங்காய் சாதம் இப்படி செய்யுங்க!

Tamil Recipe Update : தற்போதைய சூழலில் மக்கள் பலரும் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வகையில் இயற்கை உணவை தேடி அலைந்து கொண்டிருக்கின்றன

Tamil Recipe Update : இந்தியாவின் முதன்மையான அரிசி வகைகளில் ஒன்று சீரகா சம்பா. சுவை மற்றும் சிறிய அரிசி மற்றும் நறுமணம் நிறைந்த இந்த அரசி பலராலும் விரும்பி உண்ணப்படுகிறது. மேலும் உணவகங்களில் அதிகளவு சீரக சம்பா அரிசி பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வெள்ளப்பள்ளம் மற்றும் கீவலூர் தாலுக்காக்களில் சீரக சம்பா அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது.

தற்போதைய சூழலில் மக்கள் பலரும் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வகையில் இயற்கை உணவை தேடி அலைந்து கொண்டிருக்கின்றன. இதில் மனிதனுக்கு நன்மை தரும் பல இயற்கை உணவுகளில் சீரகசம்பா அரிசிக்கு முக்கிய இடம் உண்டு.  அரிசி வகை உணவில் அதிகளவு வைட்டமின் பி நிறைந்ததாகவும், குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதில் சீரக சம்பா அரிசி பலவகைகளில் நன்மை அளிக்கிறது. இதில் உள்ள செலினியம் பெருங்குடல் மற்றும் குடல் புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது. இது அதிக நார்ச்சத்து கொண்டது, இது பெருங்குடல் மற்றும் குடலில் இருந்து ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்ற உதவுகிறது.

இதில் உள்ள பைட்டோநியூட்ரியண்டுகள் மார்பக புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகிறது மற்றும் இதய செயல்பாட்டை வலுப்படுத்துகிறது. சீரக சம்பா அரிசியில் உள்ள எண்ணெய் கொழுப்பைக் குறைக்கிறது. மற்றும் உடலில் அதிக அடர்த்தி கொண்ட கொழுப்புப்புரதத்தை (HDL) அதிகரிக்கிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவாக பயன்படுகிறது.

இதில் உள்ள நார்சத்து உணவில் உள்ள கலோரிகளைக் கட்டுப்படுத்துகிறது. மேலும் உணவு செரிமானத்தை எளிதாக்குகிறது மற்றும் மலச்சிக்கலைப் போக்க உதவுகிறது. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, அவை இதய நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கின்றன. இது தைராய்டு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் ஹைப்பர் தைராய்டிசத்தை குறைக்கிறது.

சீரக சம்பா அரிசியில் தேங்காய் சாதம் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

அரிசி: 1 கப்

நெய்: 2 டீஸ்பூன்

இஞ்சி-பூண்டு விழுது: 1 டீஸ்பூன்

தேங்காய் பால்: 300 மிலி (அல்லது) ஒன்றரை கப் தேங்காய் பால் மற்றும் ஒன்றரை கப் தண்ணீர்

பச்சை மிளகாய்: 2

இலவங்கப்பட்டை: 2

ஏலக்காய்: 1

கிராம்பு: 2

பிரியாணி இலைகள்: 2

உப்பு: தேவையான அளவு

ஒரு பட்டாணி, கேரட், பீன்ஸ் மற்றும் உருளைக்கிழங்கு, வெட்டப்பட்டது

செய்முறை :

சீராகா சம்பா அரிசியை 15 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைக்கவும். அடுத்து பிரஷர் குக்கரில், நெய், மசாலா, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அடுத்து, காய்கறிகள் மற்றும் பச்சை மிளகாய், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். அடுத்து அரிசி மற்றும் தேங்காய் பால் சேர்க்கவும். 2 விசில் வந்தவுடன் குக்கரை இறக்கி வைத்து 10 நிமிடங்கள் கழித்து பறிமாறவும். சுவையாக சீரகசம்பா தேங்காய் சாதம் தயார்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil health seeraga sambha coconut rice making update

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com