Magbo Fruit Health Benefits In tamil : குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது மாம்பழம். முக்கனிகளில் ஒன்றாக மாம்பழம் அதிக சுவையுடன் உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை தருவதாகும். இதனால் மாம்பழ சீசன் வந்தவுடன் குழந்தைகள் அனைவரும் குஷியாகி விடுவார்கள்.
ஆனால், மாம்பழங்களை சாப்பிடுவதற்கு முன் தண்ணீரில் ஊறவைத்து, அழுக்கை அகற்றவும், பயிர்களில் பயன்படுத்தப்படும் ரசாயனங்களை அகற்றவும் வழக்கமாக இதை செய்வதை நீங்கள் கவனித்திருக்கலாம். ஆனால் இது ஒன்று மட்டுமே மாம்பழத்தை தண்ணீரிர் ஊற வைக்க காரணம் இல்லை
மாம்பழங்களை உண்ணும் முன் தொடர்ந்து தண்ணீரில் ஊறவைப்பது சிறந்தது ஏன்?
பைடிக் அமிலத்திலிருந்து விடுபடுதல்:
ஃபைடிக் அமிலம் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஊட்டச்சத்துக்களில் ஒன்றாகும். ஊட்டச்சத்துக்கு எதிரானதாகக் கருதப்படும் பைடிக் அமிலம், இரும்பு, துத்தநாகம், கால்சியம் மற்றும் பிற தாதுக்கள் போன்ற சில கனிமங்களை உடலால் உறிஞ்சுவதைத் தடுக்கிறது, இதனால் தாதுப் பற்றாக்குறையை ஏற்படுத்தும்
ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி, மாம்பழத்தில் பைடிக் அமிலம் எனப்படும் இயற்கை மூலக்கூறு உள்ளது, இது பல பழங்கள், காய்கறிகள் மற்றும் கொட்டைகளில் கூட காணப்படுகிறது. எனவே, மாம்பழத்தை தண்ணீரில் சில மணி நேரம் ஊறவைத்தால், அது உடலில் வெப்பத்தை உருவாக்கும் அதிகப்படியான பைடிக் அமிலத்தை அகற்ற உதவுகிறது.
நோய்களைத் தவிர்ப்பது:
முகப்பருக்கள் தலைவலி, மலச்சிக்கல் மற்றும் குடல் தொடர்பான பிற உடல்நலப் பிரச்சனைகள் போன்ற பல தோல் பிரச்சனைகளைத் தடுக்கவும் இந்தப் பயிற்சி உதவுகிறது. “பழங்களை தண்ணீரில் ஊறவைப்பதால் அவற்றிலிருந்து வெப்பத் தன்மை நீங்கும். வயிற்றுப்போக்கு மற்றும் முகப்பரு போன்ற தோல் பிரச்சனைகள் மற்றும் பக்கவிளைவுகள் ஏற்படுத்தாமல் இருக்க இந்த செயல்முறை பின்பற்றப்படுகிறது.
இரசாயனங்களை கழுவுதல்:
பயிர்களைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகள் நச்சுத்தன்மை வாய்ந்தவை மற்றும் சுவாசக் குழாய் எரிச்சல், ஒவ்வாமை உணர்திறன், தலைவலி, கண் மற்றும் தோல் எரிச்சல், குமட்டல் போன்ற பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தும். மேலும், மாம்பழங்களை ஊறவைப்பதன் மூலம், அதன் தண்டுகளில் உள்ள பைடிக் அமிலம் கொண்ட பால் சாற்றை நீக்குகிறது.
குளிர்ச்சியாக வைத்திருத்தல்:
மாம்பழம் உடலின் வெப்பநிலையை உயர்த்தி, தெர்மோஜெனீசிஸ் உற்பத்தியை ஏற்படுத்துகிறது. எனவே, மாம்பழங்களை தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைப்பது அவற்றின் தெர்மோஜெனிக் பண்புகளை குறைக்க உதவும்.
கொழுப்பை கட்டுப்படுத்துதல்:
மாம்பழத்தில் பைட்டோ கெமிக்கல்கள் அதிகம். எனவே பழத்தை ஊறவைப்பது அவற்றின் செறிவைக் குறைத்து, அவை ‘இயற்கையான கொழுப்பை நீக்கி’ செயல்படச் செய்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.