Tamil Health Tips : உடல் எடை குறைப்பக்கு உணவு கட்டுப்பாடு மற்றும் சாதுவான உணவுகள் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் என்று யார் சொன்னது? சரியான முறையில் செய்தால், எடை குறைப்பு எளிமையாகவும், அதிக நன்மைகள் தரக்கூடியதாகவும் இருக்கும். உடல் எடையை குறைக்க பல உணவுகள் இருந்தாலும், சில நேரங்களில் வேர்க்கடலை போன்ற சில உணவுகளும் சிறப்பான நன்மைகளை கொடுக்கும். அவை உடல் செயல்பாடுகளையும் ஆரோக்கியமான உணவையும் உள்ளடக்கிய ஒரு வழக்கத்தை பின்பற்றுகின்றன.
வேர்க்கடலையில் அதிக கலோரிகள் இருந்தாலும், அவை புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்தவை என்றும் கூறப்படுகிறது, இது உங்களை நீண்ட நேரம் முழுமையாக உணர வைக்கும், மேலும் செரிமானம் மற்றும் எடை குறைப்புக்கு முக்கிய பங்காற்றும். ஆனால், எடை குறைப்புக்கு முயற்சி செய்பவர்கள் சிற்றுண்டியை மிதமான அளவில் செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும், ஏனென்றால் மற்ற எல்லாவற்றையும் போலவே, வேர்க்கடலை அதிகமான சாப்பிடும் போது எதிர் விளைவை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
எடை குறைப்புக்கு வேர்க்கடலை ஏன் நல்லது?
இது தொடர்பாக தி ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, புரதம் நிறைந்த எந்த உணவும் சில கலோரிகளை எரித்துவிடும். அதன்படி வேர்க்கடலையில் கலோரிகளும் உள்ளன, ஆனால் அவற்றை மென்று சாப்பிடும் வகையில் உள்ளது. இதனால் நீங்கள் கலோரிகளை சிறிது அளவு மட்டுமே எடுத்துக்கொள்வது போல் இருக்கும். வேர்க்கடலையில் சில ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன, அவை இதயத்திற்கு நல்லது. இவை உடல் பருமன், வீக்கம் மற்றும் சில இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கும்.
மேலும், வேர்க்கடலை உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு நல்லது என்று அறியப்படுகிறது, அவை ஒரு சிறந்த ஆற்றல் மூலமாகும். அதன்படி நீங்கள் வேர்க்கடலை தின்பதும், நீங்கள் முழுமையாக உணர்கிறீர்கள், உங்கள் ஆற்றல் இருப்புக்களும் நிரப்பப்படும். உங்களுக்கு அதிக ஆற்றல் இருக்கும்போது, நீங்கள் அதிக கலோரிகளை எரிக்கலாம், மேலும் இது உங்கள் உடல் எடையை குறைக்க உதவும்.
வேர்க்கடலையை உணவில் சேர்த்தல்
வேர்க்கடலையை பச்சையாக உட்கொள்வதே எளிதான வழி. நீங்கள் அவற்றை தண்ணீரில் ஊறவைத்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால், நீங்கள் அவற்றை பச்சையாகவும் வறுக்கவும் செய்யலாம். பின்னர், வேர்க்கடலை வெண்ணெய், வேர்க்கடலை டிப், வேர்க்கடலை ஜெல்லி போன்ற பல வழிகளில் இதனை உட்கொள்ளலாம். வேர்க்கடலையை முக்கிய உணவுகளிலும் சேர்க்கலாம்.
நீங்கள் சில உணவு மாற்றங்களைச் செய்வதற்கு முன்பு எப்போதும் உங்கள் மருத்துவர் அல்லது உணவியல் நிபுணரிடம் கருத்துக்களை கேட்கவும், ஏனென்றால் அவர்கள் உங்கள் மருத்துவ குறிப்புகள் பற்றி அறிந்திருப்பதால் அவர்கள் உங்களுக்கு சிறப்பாக வழிகாட்ட முடியும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil