Tamil Health Update : அறுசுவை உணவுகளில் அனைவருக்கு பிடித்தமான சுவை என்றால் அது இனிப்பு மட்டுமே. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் இனிப்பு பொருட்களை தவறவிடயாருமே விரும்பமாட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் குழந்தைகளை இனிப்பு பொருட்கள் சாப்பிடுவதை நம்மால் கட்டுப்படுத்தவே முடியாது என்று கூட சொல்லாம்..
இனிப்பு சுவை மிகுந்தஉணவு பொருட்களை சாப்பிடுவதில் இருந்து விலகி இருப்பது கடினம்தான் என்றாலும் கூட அதிகப்படியான இனிப்புகள் சாப்பிடுவது உடலுக்கு கேடு என்று வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர். எப்போதாவது சாப்பிடுவது சரியாக இருக்கும். அதை விடுத்து அடிக்கடி அல்லது ஒரே நேரத்தில் அதிக இனிப்புகளை சாப்பிடுவது, அதிகப்படியான சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
அதிக இனிப்புகளை சாப்பிடுவதால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை திடீரென அதிகரிக்கும், மீண்டும் மீண்டும் இதையே செய்யும்போது நீரிழிவு உட்பட பல வாழ்க்கை முறை கோளாறுகளுக்கு வழிவகுக்கும். ஒருவர் இனிப்பு சாப்பிடும் ஏக்கத்தில் இருக்கும்போது அவரை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். தொடக்கத்தில் இருந்தே ஒருவரை இனிப்புகளை சாப்பிட அனுமதிக்கப்படவில்லை என்றால், அவர் தனது இனிப்பு எப்படி தீர்த்துக்கொள்ள முடியும் என்று மருத்துவரிடம் கேட்டு தெரிந்துகொள்ளலாம்.
இனிப்பு சாப்பிட முடியாதவர்களுக்கு மாற்றாக பல உணவுகள் உள்ளன. அத்தகைய ஆரோக்கியமான மாற்றாக உள்ள உணவு இனிப்பான தயிர். தயிரும் வெல்லமும் சேர்ந்த கலவையே இந்த இனிப்புத்தயிர். சுத்தமான தயிரில் வெல்லத்தை சேர்க்கும்போது அது பழுப்பு நிறத்தில் காட்சியளிக்கும். இந்தியாவில் பல வீடுகள் பதப்படுத்தப்பட்ட சர்க்கரையை வெல்லமாக மாற்றியுள்ளனர்.,அந்த நோக்கத்திற்காகவே இனிப்பு தயிர் உதவுகிறது. மற்ற இனிப்புகளை விட இது மிகவும் ஆரோக்கியமானது.
இனிப்பு தயிர் பெங்காலி வீடுகளில் ஒரு முக்கிய உணவாகும், மேலும் பண்டிகைகளில் பிரபலமான இனிப்பு உணவாக உள்ளது. இதன் சுவை நாடு முழுவதும் பிரபலம். இதனால் ஊட்டச்சத்து நிபுணர் என்மாமி அகர்வால், இந்த சுவையான இனிப்பின் ஆரோக்கிய நன்மைகளைப் கூறியுள்ளார். இது "சிறந்த புரோபயாடிக், குடலுக்கு நல்லது மற்றும் இனிப்பு பொருளுக்கு அற்புதமான இனிப்பு மாற்று" என்று கூறுகிறார்.
தயிர் புகைப்படத்துடன் பகிர்ந்துகொண்ட இந்த பதிவில், தயிர் ஒரு புளித்த தயிர் மற்றும் இது நாடு முழுவதும் மிகவும் பிரபலமான இனிப்பு... பாலை சிறிது கெட்டியாகும் வரை கொதிக்க வைத்து, அதில் வெல்லத்தை சேர்க்கவும். வெல்லம் பாலை ஒரே இரவில் புளிக்க வைக்கிறது. வீட்டில் இதனை தயார் செய்ய எளிய வழிகள் உள்ளன. இந்த ஆரோக்கியமான இனிப்பை நீங்கள் அனுபவிக்கலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil