இன்றைய விஞ்ஞான காலக்கட்டத்தில் பலரும் பலவிதமாக நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். வயதாகும்போது சந்திக்கும் பிரச்னைகள் பலவற்றை இப்போது இளைஞர்கள் பலரும் சந்தித்து வருகின்றனர். இதனால் அவர்களின் ஆயுட்காலமும் குறைந்து வருகிறது. இன்றைய கால்கட்டத்தில் அதிகமாக பலரும் சந்திக்கும் நோய் சர்க்கரை வியாதி. அதற்கு அடுத்தபடியாக, தைராய்டு பிரச்னை அனைவரும் சந்திக்கின்றனர்.
Advertisment
குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் அதிகமாக தைராய்டு பிரச்னையை எதிர்கொள்கின்றனர். இதனை தொடக்கத்திலே சரி செய்தால் நல்லது, அப்படி சரி செய்ய முடியவில்லை என்றால் பிரசவத்தின்போது இது பெரிய பிரச்னையை ஏற்படுத்தும் என்று டாக்டர்கள் சொல்வார்கள். கர்ப்பிணிகள் மட்டுமல்லாமல், பலரும் இந்த தைராய்டு பிரச்னையை சந்தித்து வருகின்றனர். அதே சமயம் ஒருவருக்கு தைராய்டு பிரச்னை இருக்கிறதா என்பதை கண்டறிய பல அறிகுறிகள் உள்ளன.
இது குறித்து டாக்டர் ஷர்மிளா கூறுகையில், முதலில் அதிமாக டயர்டாக இருக்கும். நீங்கள் உங்கள் அன்றாட வேலைகளை இமாஜன் மூலமாகவே செய்வது போன்ற தோற்றம் இருந்தாலும் உங்களால் படுக்கையில் இருந்து எழுந்திருக்க முடியாத அளவுக்கு டயர்டுநஸ் இருக்கும். அடுத்த புற்றுநோய் பாதிப்பு இருப்பது போன்று அதிகமாக முடி கொட்டும். உடலில் நிறத்தில் மாற்றம் ஏற்படும். பெண்களுக்கு நிறம் மாற்றம் ஏற்பட்டு ஆண் தொற்றத்திற்கு மாறும் நிலையும் ஏற்படும்.
Advertisment
Advertisements
திடீரென உடல் எடை அதிகரிப்பு, அல்லது குறைவு, மலச்சிக்கல், உள்ளிட்ட பிரச்னைகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டியது அவசியம் என்று கூறியுள்ளார்.