அடிக்கடி சைனஸ், மூக்கடைப்பு பிரச்சனை? உடலில் கழிவு இருக்க இதுதான் அறிகுறி: டாக்டர் உஷா நந்தினி
நமது உடலில் கழிவுகள் இருக்கிறது என்பது தான் பெரிய பிரச்னை. இன்றைக்கு மருத்துவ உலகம், உடல் கழிவுகள் மற்றும குடல் கழிவுகள் இவை இரண்டையும் நோக்கிதான் செல்கிறது.
நமது உடலில் கழிவுகள் இருக்கிறது என்பது தான் பெரிய பிரச்னை. இன்றைக்கு மருத்துவ உலகம், உடல் கழிவுகள் மற்றும குடல் கழிவுகள் இவை இரண்டையும் நோக்கிதான் செல்கிறது.
நமது உடலில் கழிவுகள் இருக்கிறதா? அதை எப்படி தெரிந்துகொள்வது, கழிவுகளை அகற்றுவதற்கு என்ன சாப்பிட வேண்டும் என்பது குறித்து, டாக்டர், உஷா நந்தினி கூறியுள்ளார்.
Advertisment
நமது உடலில் இருக்குமு் கழிவுகள். அது இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்வதற்கான, அறிகுறிகள் என்ன? அதை சரி செய்து, அந்த கழிவுகளை வெளியேற்றக்கூடிய உடலை சுத்திகரிக்கக்கூடிய ஒரு ட்ரிங்க் டீடாக்ஸ்ட்ரிங்க் ஒரு பானம் எப்படி தயார் செய்வது, என்பதை பார்ப்போம். கழிவுகளை, நச்சுக்களை, அகற்றக்கூடிய இந்த பானம், எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போமா?
நமது உடலில் கழிவுகள் இருக்கிறது என்பது தான் பெரிய பிரச்னை. இன்றைக்கு மருத்துவ உலகம், உடல் கழிவுகள் மற்றும குடல் கழிவுகள் இவை இரண்டையும் நோக்கிதான் செல்கிறது. உடலில் கழிவுகள் தேங்கி இருப்பது தான் பல நோய்களுக்கான முக்கிய காரணமாக இருக்கிறது. கழிவகள் இருக்கிறதா என்பதை எப்படி தெரிந்துகொள்வது என்றால், அடிக்கடி சைனஸ் பிரச்னை வரும். அடிக்கடி, மூக்கடைப்பு, ஒற்றை தலைவலி வருவது, உடலில் கழிவுகள் இருப்பதற்காக அறிகுறிகள்.
மலச்சிக்கல் பிரச்னை, சாப்பிட்டவுடன் ஜீரணம் ஆகாத நிலை, உள்ளிட்ட பிரச்னைகளும் உடலில் கழிவுகள் இருப்பதற்காக அறிகுறிகள்.உடல் எடை அதிகரிப்புக்கு காரணமும் குடல் கழிவுகளாக இருக்கலாம். நோய் எதிர்ப்பு சக்தி குறைவது, அடிக்கடி சளி இருமல் வருவதும் உடலில் அதிக கழிவுகள் தேங்கி இருப்பதற்காக அறிகுறிகள் தான். தோல் அரிப்பு தொடர்பான பிரச்னைகள் இருந்தாலும் உடலில் கழிவுகள் அதிகம் இருக்கிறது என்பதை குறிக்கும்.
Advertisment
Advertisements
இந்த கழிவுகள் சேர முக்கிய காரணம் நமது உணவும், லைப்ஸ்டைலும்தான். நாம் இப்போது இருக்கும் சுற்றுச்சூழலே இந்த கழிவுகளுக்கு காரணமாக இருக்கிறது. காற்று மாசுபாடு, தண்ணீர் மாசுபாடு, போன்ற சுற்றுச்சூழல் மாசுபாடே நமது உடலில் தானாக கழிவுகள் ஏற்பட காரணமாக இருக்கும்.