காலையில் முருங்கை இலை… இவ்ளோ நன்மை இருக்கு; பயன்படுத்துவது எப்படி?

Tamil Health Tips : முருங்கை இலைச் சாற்றில் ஐசோதியோசயனேட் மற்றும் நியாசிமினின் ஆகியவை உள்ளன, இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

Drumstick Leaf Benifits : மனித உடலில் ஏற்படும் பல வகை நோய்களுக்கு முருங்கை இலை அதிக பயன் தருகிறது.

முருங்கை செடியின் இலை, இது இந்தியாவில் ஏராளமாக வளர்க்கப்படுகிறது. இந்த இலை பொடியாக்கி ஆன்லைன் மற்றும் மளிகை கடைகளில் எளிதாக விற்கப்படுகிறது. கடைகளில் ரெடிமேடாக விற்கப்படும் பொடியில் உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால், முருங்கை இலை பொடியை நீங்களே எளிமையாக வீட்டிலேயே செய்யலாம். நீங்கள் செய்ய வேண்டியது சில புதிய முருங்கை இலைகளை சூரியஒளியில் உலர்த்தி அவற்றை ஒரு பொடியாக அரைக்கவும். இதனை தினமும் காலையில், ஒரு பாத்திரத்தில் சிறிது தூள் எடுத்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி சில நிமிடங்கள் வேகவைத்து முருங்கை இலை டீயை குடிக்கலாம்.

பண்டைய காலங்களில், முருங்கை இலை பொடி தோல் நோய்கள் மற்றும் தொற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்கவும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தவும், பயன்படுத்தப்பட்டது, இந்த அலையில், பூஞ்சை காளான், வைரஸ் தடுப்பு, ஆண்டிடிரஸன் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. இதனால் இது ஒரு பிரபலமான சூப்பர்ஃபுட் என்று பட்டம் பெற்றது. மேலும் இந்த பொடியை தேயிலை அல்லது காபியில் உட்கொள்வதன் மூலமும், உணவுகளில் சேர்த்துக்கொள்வதன் மூலமும் நீரிழிவு நோயாளிகளுக்கு எடை குறைப்பு, மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க இது பயன்படுகிறது.

  • இது குறித்து சிந்தியா ட்ரெய்னர் எழுதிய கொழுப்பை எப்படி குறைப்பது என்ற புத்தகத்தில், முருங்கை இலை தேநீர் எடை குறைப்புக்கு முக்கிய பயன் தருகிறது. ஏனெனில் அதில் உள்ள நுகர்வு கொழுப்பு சேமிப்புக்கு பதிலாக ஆற்றல் உற்பத்திக்கு வழிவகுக்கிறது. இலைகள் குறைந்த கொழுப்பு மற்றும் ஊட்டச்சத்து அடர்த்தியானவை மற்றும் அதிக கலோரி கொண்ட உணவுகளுக்கு மாற்றாக இதனை உண்ணலாம்.
  • முருங்கை இலைச் சாற்றில் ஐசோதியோசயனேட் மற்றும் நியாசிமினின் ஆகியவை உள்ளன, அவை இரத்த அழுத்தம் உயரத்தும் தமனிகள்  தடிமனாக இருப்பதைத் தடுக்க உதவுகின்றன,.
  • மேலும் இதில் ஆக்ஸிஜனேற்ற குளோரோஜெனிக் அமிலம் உள்ளது, இது இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும் என்று கூறப்படுகிறது.
  • இதில் வைட்டமின் சி உள்ளது, இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கு காரணமாகும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil health tips drumstrict leaf health drink drumstick leaf powder

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express