சுயஇன்பம் செய்யும் போது விறைப்புத் தன்மை குறைவு? ஆண்மைக் குறைபாடு இருக்குமோ? விளக்கும் டாக்டர் கார்த்திக் குணசேகரன்
தாம்பத்தியம் தொடர்பாக ஆண்களுக்கு பல சந்தேகங்கள் இருக்கத்தான் செய்கிறது. தங்களுக்கு பிரச்னை என்று நினைக்கும் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள வலைதளங்களில் அதற்கான வழிகளையும் தேடி வருகின்றனர்.
தாம்பத்தியம் தொடர்பாக ஆண்களுக்கு பல சந்தேகங்கள் இருக்கத்தான் செய்கிறது. தங்களுக்கு பிரச்னை என்று நினைக்கும் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள வலைதளங்களில் அதற்கான வழிகளையும் தேடி வருகின்றனர்.
பல்வேறு இளைஞர்கள் மற்றும் ஆண்கள் சந்திக்கும் முக்கிய பிரச்னையாக இருக்கும், சுய இன்பம் மற்றும் ஆண்கள் விறைப்புத்தன்மைக்கு தீர்வு தரும் வகையில் டாக்டர் கார்த்திக் குணசேகரன் ஒரு டிப்ஸ் கொடுத்துள்ளார்.
Advertisment
தாம்பத்தியம் என்பது வயது வந்த அனைவரும் விரும்பும் ஒரு முக்கிய செயல்பாடு. இதை விரும்பாதவர்கள் யாரும் இல்லை என்றே சொல்லலாம். அதே சமயம், எவ்வளவு தான் சரியாக முயற்சி செய்து, இன்பம் அடைந்தாலும், தாம்பத்தியம் தொடர்பாக ஆண்களுக்கு பல சந்தேகங்கள் இருக்கத்தான் செய்கிறது. தங்களுக்கு பிரச்னை என்று நினைக்கும் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள வலைதளங்களில் அதற்கான வழிகளையும் தேடி வருகின்றனர்.
இதில் முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால் தூக்கத்தில் விந்தணு வெளியேறுவது. தூக்கத்தில் விந்தணு வெளியேறுகிறது என்பது சாதாரணமாக ஒன்று அல்ல. அதேபோல் விறைப்புத்தன்மை பிரச்னையை பலர் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக இளைஞர்கள் பலரும் இந்த மாதிரி பிரச்னை இருக்குமோ? இருந்தால் இதை எப்படி சரி செய்வது என்பது குறித்து இணையத்தில் தேடி வருகின்றனர். ஆனால், இதை தவிர்க்க என்ன மாதிரியான உணவுகளை சாப்பிலாம் என்பது குறித்து டாக்டர் டாக்டர் கார்த்திக் குணசேகரன் கூறியுள்ளார்.
திருமணமாகாதவர்கள், வாழ்க்கையில் தாம்பத்தியம் வைத்துக்கொள்ளாதவர்கள் கூட, தங்களுக்கு விறைப்புத்தன்மை குறைபாடு இருப்பதாக சொல்வார்கள். குறிப்பாக சுய இன்பம் செய்யும்போது விறைப்புத்தண்மை இல்லை என்ற பேச்சுதான் அதிகமாக இருக்கும். 15-20 வயதில் உங்களுக்கு எதுவும் இருக்காது, எந்த வித தொந்தரவும் இருக்காது. அதனால் அடிக்கடி சுய இன்பம் செய்ய வேண்டும என்று தோன்றும். ஆனால், 30 வயதில் நீங்கள் வேலைக்கு செல்வீர்கள்.
Advertisment
Advertisements
இதன் காரணமாக 25 வயதை தாண்டி நீங்கள் சுய இன்பம் செய்யும்போது உங்கள் கவனம் இதில் இல்லாமல், வேறு எதிலாவது கவனம் இருக்கும். வெளியில் இருந்து வரும் யோசனைகள் காரணமாக சுய இன்பம் செய்யும்போது அதில், அதிகமாக கவனம் இருக்காது. ஒரு பார்ன் பார்த்துக்கொண்டு, நீங்கள் சுய இன்பம் செய்தால், அதில் முழுவதுமாக உள்வாங்கிக்கொள்ள வேண்டும். சய இன்பம் செய்யும்போது, உங்கள் கவனம் இதில் இல்லாமல் இருந்தால், உங்களுக்கு விறைப்புத்தன்மை குறையும் என்று டாக்டர் கூறியுள்ளார்.