உடலில் வலி வருவது வழக்கமானது தான் என்றாலும், அந்த வலிக்கு சரியாக மருத்துவம் பார்க்கும்போது அந்த வலி சரியாகிவிட வேண்டும். ஆனால் வருடக்கணக்கில் வலி இருந்தால் கண்டிப்பாக இது குறித்து மருத்துவரை அணுகி பார்க்க வேண்டியது அவசியம். அதேபோல் இயற்கையில் இருக்கும் மருத்துவ முறைகளை வைத்தும் இந்த வலிகளுக்கு தீர்கா காணலாம்.
Advertisment
அந்த வகையில் தீராக கழுத்து வலியை எப்படி தீர்ப்பது என்பது குறித்து, டாக்டர் ஜெயரூபா கூறியுள்ளார். 2 வருடமாக கழுத்துவலி இருக்கிறது. , அவ்வப்போது பெயின் கில்லர் எடுத்துக்கொள்பவராக இருந்தால், அப்போதும் அந்த கழுத்து வலி தீராத வலியாக இருக்கும்போது, உங்கள் எண்ணங்கள் கூட இந்த வலிக்கு ஒரு காரணமாக இருக்கலாம். குறிப்பாக நடுத்தர வயது பெண்கள் இந்த மாதிரியான வலிகளை அனுபவிக்கிறார்கள்.
குடும்பத்தின் அனைத்து வேலைகளையும் பார்க்கும் பெண்களுக்கு, இந்த மாதிரியான வலிகள் வரும். அவர்களின் மனநிலையை பொருத்து கழுத்து வலி மாறுபடும். இந்த தீராத கழுத்து வலியை சரி செய்ய எளிமையாக ஒரு பயிற்சி இருக்கிறது. முதலில் உங்கள் கழுத்தை இடதுபுறமாக திருப்பி, 6 முறை மூச்சை நன்றாக இழுத்து விடுங்கள். அதேபோல் வலதுபுறம் திருப்பி 6 முறை, கழுத்தை மேலே தூக்கி, 6 முறை என மூச்சை நன்றாக இழுத்து விட வேண்டும்.
Advertisment
Advertisements
தினமும் 4-5 முறை இந்த பயிற்சியை செய்தால், கழுத்து பகுதியில் உள்ள தசைகள் ரிலாக்ஸ் ஆகும். உடலும் ஆரோக்கியமாக இருக்கும். இந்த வழியை ஃபாலோ செய்தால் உங்கள் கழுத்து வலி குணமாகும் என்று கூறியுள்ளார்.