தாம்பத்தியம் என்பது வயது வந்த அனைவரும் விரும்பும் ஒரு முக்கிய செயல்பாடு. இதை விரும்பாதவர்கள் யாரும் இல்லை என்றே சொல்லலாம். அதே சமயம், எவ்வளவு தான் சரியாக முயற்சி செய்து, இன்பம் அடைந்தாலும், தாம்பத்தியம் தொடர்பாக ஆண்களுக்கு பல சந்தேகங்கள் இருக்கத்தான் செய்கிறது. தங்களுக்கு பிரச்னை என்று நினைக்கும் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள வலைதளங்களில் அதற்கான வழிகளையும் தேடி வருகின்றனர்.
Advertisment
இதில் முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால் விந்தணு உற்பத்தியை எப்படி அதிகரிப்பது என்ற கேள்வி பல ஆண்களுக்கு இருக்கும். அதேபோல் தாம்பத்தியத்தில் ஈடுபடும்போது, விந்து முந்துதல் பிரச்னை வந்தால், ஆண்கள் அதையே நினைத்து மன உளைச்சலுக்கு ஆளாகிவிடுவார்கள். இதனால் அவர்களின் தாம்பத்திய வாழ்க்கை மகிழ்ச்சி இல்லாமல் போய்விடும். இந்த மாதிரி பிரச்னைகளை சந்திப்பவர்களுக்கு, டாக்டர் காமராஜ் தீர்வு கொடுத்துள்ளார்.
அவர் இது குறித்து வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், ஆண்களுக்கு விந்து முந்துதல் என்பவது ஒரு ஜெனிட்டிக்காக வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். இதை தடுத்து நீண்ட நேரம் தாம்பத்தியம் வைத்துக்கொள்வதற்கு, வழிமுறைகளை கற்றுக்கொள்ளலாம். அதேபோல் இந்த விந்து முந்துதலை தடுப்பதற்கு அற்புதமான மருந்துகள் இருக்கிறது. குறிப்பாக, தாம்பத்தியத்தில் ஈடுபடும்போது விந்து வருவது போல் தெரிந்தால், ஆணுறுப்பை வெளியில் எடுத்துவிட்டு அதன் நுனியில் விரலால் அழுத்திவிட்டு, சிறிது நேரம் கழித்து தாம்பத்தியத்தில் ஈடுபடலாம்.
Advertisment
Advertisements
அடுத்து ஆண்கள் கீழே படுத்துக்கொண்டு, பெண்களை மேலே வைத்து தாம்பத்தியத்தில் ஈடுபடலாம். இப்படி ஈடுபடும்போது ஆண்களுக்கு விந்தணு விரைவில் வராது. அதேபோல், தாம்பத்தியத்தில் ஈடுபடும்போது மெதுவாக செய்வது விந்தணு விரைவில் வெளியேறுவதை தடுக்கும் என்று டாக்டர் காமராஜ் கூறியுள்ளார்.