செம்பருத்தி இலைகளுடன் இதை சேர்த்து அரைத்து யூஸ் பண்ணுங்க… முடி உதிர்தல் குறையும்; டாக்டர் நித்யா

வால் மிளகுடன், சம அளவு சீரகம் சேர்த்து வறுத்து பொடி செய்து தேன் அல்லது வெந்நீரில் கலந்து சாப்பிட்டால் எவ்வளவு நாள்பட்ட தைராய்டு பிரச்னையாக இருந்தாலும் அதனை சரி செய்ய பயன்படும்.

வால் மிளகுடன், சம அளவு சீரகம் சேர்த்து வறுத்து பொடி செய்து தேன் அல்லது வெந்நீரில் கலந்து சாப்பிட்டால் எவ்வளவு நாள்பட்ட தைராய்டு பிரச்னையாக இருந்தாலும் அதனை சரி செய்ய பயன்படும்.

author-image
WebDesk
New Update
Sembaruthi Leaves

நமது கழுத்தின் முன்பகுதியில், மூச்சுக்குழாயின் கீழே இருக்கும் ஒரு சிறிய நாளமில்லா சுரப்பி தான் தைராய்டு. இந்த சுரப்பி, ஹார்மோன்களை உற்பத்தி செய்து இரத்த ஓட்டத்தில் வெளியிடுகிறது. இந்த ஹார்மோன்கள் உடலின் பல முக்கிய செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துகின்றன. இந்த ஹார்மோன்கள் உடலின் வளர்சிதை மாற்றம், ஆற்றல் உற்பத்தி, உடல் வெப்பநிலை, இதயத் துடிப்பு மற்றும் மனநிலை போன்ற பல செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

Advertisment

அதே சமயம், தைராய்டு சுரப்பி சரியாக செயல்படவில்லை என்றால், அது ஹைப்போ தைராய்டிசம் (குறைவான ஹார்மோன் உற்பத்தி) அல்லது ஹைப்பர் தைராய்டிசம் (அதிக ஹார்மோன் உற்பத்தி) போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும், இதனால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படும். தைராய்டு பாதிப்பு மற்றும் அதனால் ஏற்படும் பக்க விளைவுகளை எப்படி சரி செய்வது என்பது குறித்து டாக்டர் நித்யா கூறியுள்ளார்.

ஒரு சிலருக்கு தைராய்டு ஹார்மோன் பாதிப்பு இருக்கும்போது தலமுடி உதிர்வு என்பது அதிகமாக இருக்கும். தைராய்டு பிரச்னைகளையும் சரி செய்து, முடி உதிர்வு பிரச்னைகளையும் சரி செய்ய, வால் மிளகு தீர்வு தரும். கல்லீரல் மற்றும் குடல் தொடர்பான பிரச்னைகளுக்கு மட்டுமல்லாமல், தைராய்டு தொடர்பான பிரச்னைகளும் தீர்க்கும் திறன் வால் மிளகுக்கு உண்டு. வால் மிளகுடன், சம அளவு சீரகம் சேர்த்து வறுத்து பொடி செய்து தேன் அல்லது வெந்நீரில் கலந்து சாப்பிட்டால் எவ்வளவு நாள்பட்ட தைராய்டு பிரச்னையாக இருந்தாலும் அதனை சரி செய்ய பயன்படும்.

Advertisment
Advertisements

அதேபோல் துளசி கஷாயத்தில் வால்மிளகு, சீரகம் பொடியை சேர்த்து குடிக்கலாம். துளசி இலைகளை தண்ணீரில் கொதிக்கவைத்து வடிகட்டி எடுத்து அதில் சேர்த்து குடிக்கலாம். செம்பருத்தி இலைகள், பூ மற்றும் நெல்லிக்காய் சேர்த்த அரைத்து, வாரம் ஒருமுறை தலையில் தேய்த்து குளித்து வந்தால், முடி உதிர்வு பிரச்னை சரியாகும் என்று டாக்டர் நித்யா கூறியுள்ளார்.

Tamil Health Tips

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: