தினமும் காலையில் 2 பூண்டு பற்கள்: என்ன பயன்? எப்படி சாப்பிடுவது?

Garlic for losing weight in tamil: பூண்டு உங்கள் ஆற்றல் அளவை அதிகரிக்கவும், கூடுதல் கலோரிகளை எரிக்கவும் உதவுகிறது. பூண்டில் உள்ள சத்துக்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகின்றன.

Tamil Health tips: How To Use Garlic To Lose Weight in tamil

Tamil Health tips: நம்முடைய அன்றாட உணவுகளுடன் சேர்க்கப்படும் உணவுப்பொருட்களில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிரம்பியுள்ளன. அந்த வகையில் எண்ணற்ற நன்மைகளை உள்ளடக்கிய உணவுப்பொ ரு ளாக வெள்ளைப் பூண்டு அல்லது பூண்டு உள்ளது. மருத்துவக்குணமிக்க இந்த அற்புதமான உணவுப்பொருளை நாம் அன்றாட எடுத்துக்கொண்டால் பல ஆரோக்கிய பலன்களை அனுபவிக்கலாம். 

பூண்டு எடை இழப்பு எவ்வாறு உதவுகிறது?

பூண்டு பற்களை வெறும் வயிற்றில் சாப்பிடுவது பற்றி நீங்கள் தெரிந் து கொள்ள வேண்டியது முக்கியான ஒன்றாக உள்ளது. உடல் எடை மற்றும்  தொப்பையை குறைக்க நம்மில் பலர் மிகவும் கடினப்படுகிறோம். இவற்றுக்கு தொடர்ச்சியான முயற்சியும் கடின உழைப்பும் அவசியமாகும். எனினும் உங்கள் உணவுகளை பழக்கவழங்களை அதற்கேற்ப மாற்றி அமைக்கும் போது நல்ல பலன் பெற முடிகிறது. 

எடை இழப்புக்கான உணவுகளைப் பற்றி பேசுகையில், இணையத்தில் நீங்கள் காணக்கூடிய பல உள்ளன. எல்லா உணவுகளும் அனைவருக்கும் ஒத்து போவதில்லை என்றாலும், சில எளிய உணவு தந்திரங்கள் நமது உடலில் சில அதிசயங்களைச் செய்யும். நீங்கள் வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவது போல் உங்கள் கூடுதல் கிலோ எடையைக் குறைத்து உங்கள் ஆரோக்கியத்தை பல வழிகளில் மேம்படுத்தும்.

பூண்டுவின் ஆரோக்கிய நன்மைகள்

பூண்டு நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இது இரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது, இரத்த அழுத்தத்தை குறைக்கிறது மற்றும் இரத்த நாளங்கள் சேதமடையாமல் பாதுகாக்கிறது. 

மேலும், உங்கள் இதய நோய்க்கான அபாயத்தை பூண்டு குறைக்கிறது. இவற்றில் வைட்டமின் பி 6, வைட்டமின் சி, ஃபைபர், கால்சியம் மற்றும் மாங்கனீசு போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளது.

எடை இழப்புக்கு பூண்டு

பூண்டில் உள்ள பல்வேறு சத்துக்கள் சேர்ந்து கூடுதல் கிலோ எடையைக் குறைக்க உதவுகின்றன. ஆரோக்கியமான உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சியுடன் வெற்று வயிற்றில் உட்கொள்ளும்போது, ​​அவை நல்ல பலனைத்தருகின்றன. 

பூண்டு உங்கள் ஆற்றல் அளவை அதிகரிக்கவும், கூடுதல் கலோரிகளை எரிக்கவும் உதவுகிறது. பூண்டில் உள்ள சத்துக்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகின்றன, இது உங்கள் எடை இழப்பு இலக்குகளை ஆதரிக்கிறது.

வெற்று வயிற்றில் பூண்டு உட்கொள்ளும் போது, ​​உங்களை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும் மற்றும் அதிகப்படியான உணவை தடுக்கிறது, இதனால் எடை இழப்பை ஊக்குவிக்கிறது. இது பசியை அடக்கும் மருந்தாக செயல்படுகிறது, அதிகப்படியான உணவை நிறுத்துகிறது.

ஊட்டச்சத்து ஜர்னலில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, பூண்டு கொழுப்பை எரிக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இது நச்சு நீக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது என்றும், உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இவை செரிமானத்தைத் தடுக்கிறன எனவும், இதனால் எடை இழப்பு அதிகரிக்கின்றது எனவும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

எடை இழப்புக்கு பூண்டு எப்படி சாப்பிடுவது?

வெறும் வயிற்றில் 2 பூண்டு பற்களை தினமும் உட்கொள்ளலாம். நீங்கள் குமட்டல் அல்லது மலச்சிக்கலை உணர்ந்தால், அதை நீங்கள் தவிர்க்கலாம். கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், குறைந்த இரத்த அழுத்தம், இரத்தப்போக்கு கோளாறுகள் மற்றும் நீரிழிவு நோயாளிகள் இந்த தீர்வை முயற்சிக்க வேண்டாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil health tips how to use garlic to lose weight in tamil

Next Story
சிவப்புத் தோலும் பாலியல் தேர்வும்… கறுப்பு என்பது வெறுப்பா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com