Tamil Health tips jaggery and ghee after meals : நம்மில் பலர் உணவு சாப்பிட்டவுடன், சர்க்கரை அல்லது இனிப்புகள் சாப்பிடுவதை விரும்புகிறோம். ஆனாலும் இதற்கு மாறாக ஒரு எளிய கலவையை அனுபவிப்பதற்கான விருப்பம் உங்களுக்கு உள்ளத? அதிலும் இந்த இனிப்பு உங்கள் இனிமையான பற்களை பாதுகாக்கும் மேலும் ஆரோக்கியமாகவும், சுவையாகவும், உங்கள் சருமத்தையும் பளபளப்பாக வைக்கும்.
இது குறித்து பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் கூறுகையில்,வெல்லம் மற்றும் நெய் ஆகியவற்றின் சக்திவாய்ந்த கலவைதான் அந்த அற்புத உணவு. இதை உணவுக்குப் பின் இனிப்பு சாப்படும் வழக்கத்திற்கு ஒரு சிறந்த வழியாகும்.
இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில்,, "இரும்புச்சத்து மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் நிறைந்த இந்த கலவையை சாப்பிடுவதன் மூலம், இனிமையான பற்களை பாதுகாக்கலாம். ஹார்மோன்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கு இந்த கலவை பெரிதும் உதவுகிறது. இதனால் தான் உங்கள் மதிய உணவு நெய்யுடன் இருக்க வேண்டும்
ஆயுர்வேதத்தின்படி, வெல்லம் மற்றும் நெய் ஆகியவற்றை ஒன்றாக எடுத்துக் கொள்ளும்போது உடலை நச்சுத்தன்மையில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. இது தவிர, தோல், முடி மற்றும் நகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க இந்த கலவை உதவுகிறது. மேலும் மன அழுத்தத்தை குறைக்கும் இந்த கலவை, அதே நேரத்தில் இரும்புச்சத்து குறைபாடு காரணமாக ஏற்படும் இரத்த சோகை சிக்கல்களை சமாளிக்கவும் உதவுகிறது.
வெல்லம், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைக்கு மாற்றாக, இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காத ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. இதில் இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின்கள் பி மற்றும் சி. ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளது. நெய் கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஏ, ஈ, டி போன்ற வைட்டமின்கள் நிறைந்த மூலமாகும். இது தவிர, இதில் வைட்டமின் கே உள்ளது, இது எலும்புகளுக்கு கால்சியத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது.
உடல் செயல்பாடுகளின் வெவ்வேறு அம்சங்களில் பணியாற்றுவதன் மூலம், இந்த கலவை நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil