தமிழகத்தில் பாரம்பரிய உணவுகளில் ஒன்று இட்லி. உணவு பழக்க வழக்கங்கள் மாறினாலும், பெரும்பாலான வீடுகளில் இப்போதும் காலை உணவாக இட்லி உண்ணும் பழக்கம் இருக்கிறது. இந்த இட்லியை செய்வது மிகவும் எளிது. ஆனால் எவ்வளவு எளிதான வழிமுறை என்றாலும் பல வீடுகளில் இட்லி சாஃப்டாக இருப்பதில்லை. இதானால் காலை உணவாக இட்லி வைக்கும்போது பலர் சாப்பிடாமலோ அல்லது பாதி சாப்பட்டிலோ எழுந்து சென்ற நிகழ்வு பல வீடுகளில் நிகழ்ச்சிருக்க வாய்ப்புள்ளது.
இதனை தடுக்க இட்லி மிருதுவாக வர பல வழிமுறைகள் உள்ளது அதில் ஒன்றை இப்போது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
புழுங்கல் அரிசி – 4 டம்பளர்
உளுந்தம்பருப்பு – 1 டம்ளர்
வெந்தயம் – அரை டம்ளர்
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
இந்த முறையில் முதலில்அரசி மற்றும் உளுந்தம்பருப்பு தரமானதாக இருப்பது அவசியம். அரிசி மற்றும் உளுந்து இரண்டையும் நன்றாக சுத்தம் செய்து குறைந்தது 3 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பிறகு உளுந்து மற்றும் வெந்தயம் சேர்த்து அரைக்கவும். கிரைண்டரில் அரைத்தால் மட்டுமே இட்லி மிருதுவாக இருக்கும். இதை அரைக்கும்போது தண்ணீர் அளவாக சேர்ப்பது மிக அவசியம்.
அதன்பிறகு அரியை கல்உப்பு சேர்த்து கிரைண்டரில் அரைக்கவும். அரிசி அரையும்போது அதனுடன் அரைகப் வடித்த சாதத்தை போட்டு அரைத்தால் மருதுவான இட்லி கிடைக்கும். மாவை அரைத்து எடுக்கும்போது பஞ்சு போன்று மிருவாக இருக்க வேண்டும். அதன்பிறகு உளுந்து மற்றும் அரிசி மாவை சேர்த்து ஒன்றாக கலக்கவும். அதன்பிறகு வேறொரு பாத்திரத்தில் மாற்றி இரவு முழுவதும் புளிக்க வைக்கவும்.
புளிக்க வைக்கும் மாவை கிளறி விட கூடாது. அப்படி கிளறினால் இட்லி கல் போன்றுதான் கிடைக்கும். அதனால மாவை வேறு பாத்திரத்தில் மாற்றிய பிறகு கை வைக்க வேண்டாம். அதன்பிறகு மறுநாள் மாவு சரியான பதத்தில் பொங்கியிருக்கும். அப்போது மாவை அதிகம் கிளறாமல் அப்படியே எடுத்து இட்லி தட்டுகளில் ஊற்ற வேண்டும். அதன்பிறகு ஆவியில் வெந்த இட்லி மிருதுவாக கிடைக்கும்.
காலை உணவாக இட்லி சாப்பிடும்போது வைட்டமின்கள், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், ஆகிய சத்துக்கள் கிடைக்கும். நாள் முழுவதும் உடல் சுறுசுறுப்பாக இயங்க வழி செய்யும். இதில் இருக்கும் அமீனோ அமிலங்கள் உடலில் உள்ள திசுக்களை புதுப்பிக்க உதவும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil