Tamil Health Turmeric Milk Making : உணவுமுறை மாறுதல் காரணமாக பலரும் பல வகையான உடல் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட ஆரோக்கியமான பாரம்பரிய உணவுமுறைகளை பின்பற்றவேண்டியது மிகவும் அவசியம். இந்த பாரம்பரியமாக நமது வீட்டில் சமயலறையில் பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களுமே உடல் ஆரோககியத்தில் முக்கிய பங்காற்றி வருகிறது. இதில் மஞ்சள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திலும் முக்கிய நன்மைகளை வழங்குகிறது.
மஞ்சளுடன் பால் சேர்த்து சாப்பிடும்போது உடல் ஆரோக்கியம் மேலும் மேம்படும். ஆனால் மஞ்சள் பால் எவ்வளவு ஆரோக்கியமானதாக இருந்தாலும், நம்மில் பலர் அதன் சுவையை மனதில் வைத்துக்கொண்டு அதனை குடிப்பதைத் தவிர்த்துவிடுகிறோம். மஞ்சல் பால் சரியான கலவை முறையில் தயாரிக்க தவறினால் மட்டுமே சுவை மோசமாக இருக்கும் என்று கூறியுள்ள ஊட்டச்சத்து நிபுணர் முன்முன் கனேரிவாலின் மஞ்சள் பால் எப்படி தயாரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ,
இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மஞ்சள் பால் சரியான முறையில் தயாரிப்பதற்கான விரிவான செய்முறையைப் பகிர்ந்துள்ளார். “மஞ்சள் பால் சாப்பிடுவது மிகவும் நல்லது. இது புற்றுநோய்க்கு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. ஒரு கிளாஸ் மஞ்சள்பால் நன்றாக குணமடையவும், நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் மற்றும் பல ஆரோக்கிய நன்மைகளுக்கும் உதவும்.
மஞ்சள் பால் தயாரிப்பதற்கான சரியான வழி :
கடாயில் சிறிது நெய்யை சூடாக்கவும். இது மஞ்சள் தூளில் உள்ள அனைத்து செயலில் உள்ள சேர்மங்களையும் கரைக்க உதவும்.
நெய்யில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து மிகக் குறைந்த தீயில் சில நொடிகள் வேக விடவும்.
அதன்பிறகு தீயை அணைத்து, ஒரு சிட்டிகை கருப்பு மிளகு தூள் சேர்க்கவும். ஜாதிக்காய் மற்றும் இலவங்கப்பட்டை தூள் சேர்க்கவும். இந்தக் கலவை இன்னும் சிறப்பாகச் செயல்படும்.
கலவை தயாரானதும், வெதுவெதுப்பான பால் மற்றும் சிறிது சர்க்கரை சேர்க்கவும், சிறிது நேரம் கழித்து பாலை எடுத்து பருகலாம். இந்த முறையில் செய்யும்போது மஞ்சள் பால் இது மிகவும் சுவையாக இருக்கும், மற்றும் உங்களுக்கு நன்றாக வேலை செய்யும்," என்று கூறியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil