தினமும் காலையில் 2 கிராம்பு… எவ்ளோ நன்மை தெரியுமா?

Cloves Benifits : ஆரோக்கிய நன்மைகள் தரும் கிராம்பு தினமும் இரண்டு சாப்பிட்டால் அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும்

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், மக்கள அனைவரும் பெரும் துன்பத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள மக்கள் அனைவரும் இயற்கை பொருட்களை நாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எவ்வளவுதான் மருந்துகள் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டாலும் இயற்கை பொருட்களில் உள்ள நலன்களை பெறுவது தான் உடலுக்கு உண்மையான சக்தியை கொடுக்கும்.

அந்த வகையில், இந்திய மருத்துவத்திலும், ஆயுர்வேதத்திலும் இயற்கையின் அதிக ஆரோக்கியம் நிறைந்த கிராம்பு அதிக நன்மைகளை கொடுக்கிறது. கிராம்பில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால், உடலில் இரத்த வெள்ளை அணுக்களை அதிகரிக்க உதவுகிறது. மேலும் உங்கள் உடலை நோயிலிருந்து பாதுகாக்கவும், நோய்ஏதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பெரிதும் உதவுகிறது.

கிராம்பில் உள்ள வைட்டமின்கள், செரிமான மண்டலம் சீராக இயங்கவும், செரிமான பிரச்சினைகளுக்கு தீர்வும் கொடுக்கிறது. கல்லீரல் தான் உங்கள் உடலை நச்சுத்தன்மையை நீக்க உதவுகிறது. மேலும் கல்லீரலின் செயல்பாட்டை ஆரோக்கியமாக்க, தினமும் கிராம்பு சாப்பிடுவது நன்மை பயக்கும். மேலும் கிராம்புகளில் இருக்கும் யூஜெனோல் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. பல்வலி உள்ளவர்கள் கிராம்பு எண்ணெய் பயனபடுத்தினால் பல்வலியை தீர்க்கும். பல் வலி, ஈறுகளில் வலி இருந்தாலும் அந்த இடத்தில் கிராம்பு வைத்தால் வலியைத் தீர்க்கும்.

கிராம்புகளில் இருக்கும் யூஜெனோல் வலி நிவாரணி மற்றும் அழற்சி எதிர்ப்பு திறன்களையும் கொண்டுள்ளது. வலி நிவாரணத்திற்காக நீங்கள் அவற்றை உட்கொள்ளலாம் மேலும் தலைவலி உள்ளவர்கள், கிராம்பை பயன்படுத்தாலம். பாலுடன் கிராம்பு தூள் கலந்து குடிக்கலாம். கிராம்பு எண்ணெய்யை நுகர்ந்தால் கூட நிவாரணம் கிடைக்கும். கிராம்பில் ஃபிளாவனாய்டுகள், மாங்கனீசு மற்றும் யூஜெனோல் உள்ளதால், எலும்பு மற்றும் மூட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.

காலையில் எழுந்தவுடன்  2 கிராம்புகளை வாயில் அப்படியே வைத்திருந்தால் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அகற்றும். பற்களின் ஈறுகளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. கிராம்பு மற்றும் துளசி பயன்படுத்தி வீட்டில் மவுத்வாஷையும் தயார் செய்யலாம். நீரிழிவு நோயாளிகள், தினம் உணவில் கிராம்பு சேர்த்து உண்ணும்போது உடலில் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கிறது.  இரத்தத்தின் சர்க்கரை சமநிலை செய்கின்றன.

கிராம்புகளில் ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டிகார்சினோஜெனிக் பண்புகள் உள்ளன. இவை உடலில், நுரையீரல், மார்பக மற்றும் கருப்பை புற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கின்றன.  காலையில் கிராம்பை மென்று சாப்பிட்டாலோ அல்லது அப்படியே வைத்திருந்தாலோ அன்றைய நாள் முழுவதும் உங்களை மிகவும் நிதானமாகவும் அமைதியாகவும் உணர வைக்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil health update cloves benifits in tamiil daily have 2 cloves

Next Story
90’s பெஸ்ட் காம்பெயர்.. சூப்பர் ஸ்டார், தல, தளபதி பட நடிகை… சித்தி 2 கௌரி கேரியர் கிராஃப்uma padmanaban
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express