scorecardresearch

அவ்ளோ நன்மை இருக்கு: கொத்தமல்லி தண்ணீர் தினமும் ஏன் பருக வேண்டும் தெரியுமா?

Coriander Water : கொரோனா காலகட்டத்தில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கொத்தமல்லி நீர் தரும் நன்மைகள் பற்றி தெரிந்துகொள்வோம்

அவ்ளோ நன்மை இருக்கு: கொத்தமல்லி தண்ணீர் தினமும் ஏன் பருக வேண்டும் தெரியுமா?

தற்போதைய கொரோனா காலகட்டம் நமது உடல் பாதுகாப்பு மிக அவசியம் என்பதை நமக்கு புரிய வைத்துள்ளது. இந்த காலகட்டத்தில் ஆரோக்கியமான மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளுக்கு நாம் முக்கியத்துவம் தர வேண்டும். உடல் நோய்எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதன் மூலம் எளிதில் கொரோனவை விரட்டலாம். அந்த வகையில் உடல் நோய் எதிப்பு சக்தியை அதிகரிக்கும் 6 வகை திரவ உணவுகள் குறித்து இங்கே பார்க்கலாம்.

ஆயுஷ் அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட கொரோனா தொற்று வழிகாட்டுதலின் படி, தானியா சேர்த்த வெதுவெதுப்பான நீர் ஒரு ஆரோக்கியமான உணவு முறையாகும். லைஃப் பயிற்சியாளரும் பிரபல ஊட்டச்சத்து நிபுணருமான லூக் கோடின்ஹோ கூட இது இந்தியர்களின் மிகவும் சத்தான மசாலாப் பொருட்களில் இதுவும் ஒன்றாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவ குணங்கள்நிறைந்த தனியாவில், மனித உடலின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அவசியமான வைட்டமின் ஏ, சி மற்றும் கே போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. உடலின் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு நீங்கள் ஒரே ஒரு தீர்வைத் தேடுகிறீர்கள் என்றால், அது தனியாவாக இருக்கலாம. தனியா சேர்த்து தயாரித்த நீரின் நன்மைகள் மற்றும் அதை நீங்கள் எவ்வாறு வீட்டில் தயாரிக்கலாம் என்பதைப் பற்றி பார்க்கலாம்.

தனியா நீர் செய்வது எப்படி

ஒரு வாணலியை எடுத்து, 1 டீஸ்பூன் கொத்தமல்லி 2 கப் தண்ணீரில் 5 நிமிடங்கள் வேகவைக்கவும். அடுத்து அதனை குளிர்வித்து, நன்கு தனியாவை கசக்கி, பிழிந்துவிட்டு அந்த நீரை குடிக்கவும். இது அதிக நன்மைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

வெப்பத்தை தனிக்க உதவுகிறது

அதிகப்படியான காரமான உணவை உட்கொள்வதால் உங்கள் வயிற்றில் அதிக எடை அல்லது வெப்பம் இருக்க வாய்ப்புள்ளது. அப்போது நீங்கள் கொத்தமல்லி தண்ணீரை ஒரு நாளைக்கு 3-5 முறை குடிக்கவும், அதன் குளிரூட்டும் பண்புகள் உடனடியாக உடல் உடல் சூட்டை தனிக்கும்.

செரிமானத்தில் பயனுள்ளதாக இருக்கிறது

இது பெரும்பாலும் எடை குறைப்புக்கு நல்லது என்று கண்டறியப்பட்டுள்து. கொத்தமல்லி விதைகளில் செரிமான பண்புகள் உள்ளன, அவை செரிமான அமைப்பின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகின்றன மற்றும் எடை குறைப்புக்கு பயணத்தில் பயனுள்ளதாக இருக்கும்.

சிறுநீரகத்தை சுத்தப்படுத்துகிறது.

நீங்கள் சிறுநீரக பிரச்சினையால் பாதிக்கப்படுகிறீர்கள் அல்லது உங்கள் சிறுநீரகங்கள் பலவீனமாக இருந்தால், தினமும் கொத்தமல்லி தண்ணீரைக் குடிக்கத் தொடங்குங்கள், ஏனெனில் இது உடலில் நீர் தக்கவைப்பதை குறைக்க வழிவகுக்கிறது. மேலும் அனைத்து வகையான நச்சுகள் மற்றும் நுண்ணுயிரிகளையும் வெளியேற்ற அனுமதிக்கிறது.

கீல்வாதம் வலியை நீக்குகிறது

இந்தியன் ஜர்னல் ஆஃப் மெடிக்கல் ரிசர்ச் படி, கொத்தமல்லி மூட்டு வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது, மேலும் இந்த விதைகளில் லினோலிக் அமிலம் மற்றும் சினியோல் போன்ற சேர்மங்கள் நிரம்பியுள்ளன என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது, இது மூட்டு அழற்சி வலிக்கு சிகிச்சையளிக்க உதவும், மேலும் வீக்கமும் குணமடைய உதவி செய்கியது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Tamil health update have drink coriander water daily benifits