Tamil Health Update : வளரும் விஞ்ஞான காலத்தில் உலகம் முன்னேற்றத்தை நோக்கி வேகமான நகர்ந்தாலும், மனிதனுக்கு ஏற்படும் நோய் தொற்றுக்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நோய் தொற்றுக்களை கட்டுப்பட்டுத்தும் வகையில் பலவித ஆங்கில மருத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டு வெளி வந்தாலும் அதனை தவிர்த்து, பலரும் இயற்கை பொருட்களை நாடி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆங்கில மருந்துகள் நோய் வந்த பிறகு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இயற்கையில் கிடைக்கும் பல தானியங்கள் நோய் தொற்று ஏற்படாமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இதனால் அதிகப்படியான மக்கள் தங்களது உணவில் முழுவதும் தானியத்தை சேர்த்து வருகின்றனர். ஆரோக்கிய நன்மைகள் அளிப்பதில் வல்லமை பெற்ற தானியங்கள், எடை குறைப்பு முதல் பலவகை நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கிறது. குறிப்பாக கோடைகாலத்தில், சோளம் அல்லது அரிசி வகை உணவுகள் மனித ஆரோக்கியத்தை காப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது குறித்து ஆயுர்வேத பயிற்சியாளர் டாக்டர் டிக்ஸா பாவ்ஸர் அதன் "பசையம் இல்லாத, முழு தானிய நன்மைக்காக" "புதிய குயினோவா" என்று கூறியுள்ளார்.
இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஒவ்வொரு நாளும் தனது உணவில் சோள ரொட்டி முக்கிய பங்கு வகிப்பதாகவும், "கோதுமையை விட ஜீரணிக்க எளிதானது மற்றும் எடையை கட்டுக்குள் வைத்திருக்க சோளம் அதிகம் உதவுவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அதிக ஊட்டச்சத்து கலவை நல்ல ஆரோக்கியத்திற்கு வரும்போது ஜோவரை விரும்பத்தக்க தானியமாக மாற்றுகிறது" எனறும் கூறியுள்ளார்.
கோடையில் உங்கள் உணவில் சோளம் முக்கிய இடம் தருவது ஏன்?
இது பசையம் இல்லாதது
நார்ச்சத்து நிறைந்தது
இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது
அதிக புரதம்
வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் (இரும்பு, மெக்னீசியம், தாமிரம், கால்சியம், துத்தநாகம், வைட்டமின் பி 3) நிறைந்திருப்பதால் எலும்புகளுக்கு நல்லது
எடை குறைப்புக்கு சிறந்தது
வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது மற்றும் மலச்சிக்கலை நீக்குகிறது
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
ஆற்றல் அளவை பராமரிக்கிறது
இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது
ஜோவர் ரொட்டி செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
சோள மாவு - 2 கிண்ணங்கள்
தண்ணீர்
செய்முறை
சோள மாவை தண்ணீர் சேர்த்து மெதுவாக பிசைய ஆரம்பியுங்கள். பந்துகளை போல் உருட்டி வைத்தக்கொள்ளவும். அவற்றை ஒரு சுத்தமான பருத்தி துணியில் வைக்கவும். ரோட்டியைப் போல் தட்டையாக இருக்கும் வரை உங்கள் கையால் அழுத்தவும். அதன்பிறகு அதனை இரும்புத் தவாவில் வைத்து, அது தயாராகும் வரை சமைக்கவும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil