மனித உடலுக்கு ஆரோக்கியம் தருவதில் முக்கிய பங்காற்றுவது காய்கறிகள். ஒவ்வொரு காய்கறிகளும் ஒவ்வொரு பயனை கொண்டுள்ளது. இதில் பல காய்கறிகள் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய் நம்மை தாக்காமல் பாதுகாக்கிறது. அந்த வகையில் நமக்கு பல வகைகளில் நன்மை தரும் முக்கிய காய்கறிகளில் ஒன்று சுண்டைக்காய். தென்னிந்தியவின் பிரதான உணவு வகைகளில் பயன்படுத்தப்படும் இந்த காயை பெரிதாக யாரும் கண்டுகொள்வதில்லை. வெப்பமண்டல நிலைமைகளின் கீழ் வளரும் இந்த காய், சுவையான வற்றாத நன்மைகளை அளிக்கிறது.
ஹீமோகுளோபின் குறைவாக உள்ளவர்களுக்கு, சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கவும், இரத்த சோகை மற்றும் அதனுடன் தொடர்புடைய கோளாறுகளை தீர்க்கவும் சுண்டைக்காய் பெரிதளவில் உதவுகிறது. இது செரிமான பிரச்சினைகளுக்கும், அஜீரணம் காரணமாக வயிற்றுப்போக்கு, அமிலத்தன்மை மற்றும் வயிற்று வலி போன்ற பல்வேறு பிரச்சினைகளை தீர்க்கிறது. சுண்டைக்காய் பொதுவாக உறுதியான மற்றும் கசப்பானதாக இருப்பதால், அவை இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதற்கும், நீரிழிவு நோயைத் தடுப்பதற்கும் சிறந்தவை.
மேலும் சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற பொதுவான நோய்களிலிருந்து உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அவை இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இருதய நோய்களை விலக்கி வைக்கவும், சிறுநீரக செயல்பாட்டிற்கும் சிறந்த நன்மைகளை தருகிறது. கர்ப்பிணி, மாதவிடாய் அல்லது மாதவிடாய் நின்ற பெண்களுக்கு, சுண்டைக்காய் பெரிதளவில் நன்மைகளை கொடுக்கிறது. பெண்கள் தொடர்பான பக்க விளைவுகளை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது. வளர்சிதை மாற்றத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கிறது,
மேலும் சில வகையான புற்றுநோய்களைத் தடுக்கவும், இயற்கையாக பாக்டீரியாவை எதிர்த்து போராடும் குணம் கொண்டுள்ளது. சுண்டைக்காய் பல வழிகளில் சமைக்க முடியும், ஆனால் மிகவும் பிரபலமான மற்றும் பயனுள்ள தயாரிப்பாக உள்ளது, இந்திய மசாலாப் பொருள்களான மஞ்சள் மற்றும் கறிவேப்பிலை போன்ற மூலிகைகள் சேர்ப்பதன் மூலம் சுண்டைக்காய் ஆரோக்கிய நன்மைகளை அதிகரிக்கும்!
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil