Women Health News: பெண்கள் இரவில் Bra அணிவது ஆபத்தா? இதைக் கவனிங்க முதல்ல!

Tamil health Update : எந்தவொரு நோயின் வளர்ச்சியிலும், குறிப்பாக புற்றுநோயின் வளர்ச்சியில் எந்த வகையான உள்ளாடைகளும் பங்கு வகிக்காது அல்லது தாக்கத்தை ஏற்படுத்தாது

Tamil health Update : எந்தவொரு நோயின் வளர்ச்சியிலும், குறிப்பாக புற்றுநோயின் வளர்ச்சியில் எந்த வகையான உள்ளாடைகளும் பங்கு வகிக்காது அல்லது தாக்கத்தை ஏற்படுத்தாது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Women Health News: பெண்கள் இரவில் Bra அணிவது ஆபத்தா? இதைக் கவனிங்க முதல்ல!

Women Health Update In Tamil : விரும்புவதாக இருந்தாலும், வெறுப்பதாக இருந்தாலும், ப்ரா என்பது பெண்களின் ஒருங்கிணைந்த ஒரு ஆடையாக மாறிவிட்டது. ஆனால், ப்ரா ஒரு பொதுவான ஆடையாக இருந்தாலும், இதனைச்சுற்றி பல கட்டுக்கதைகள் உள்ளன. அதிலும் குறிப்பாக இரவில் ப்ரா அணிவது மார்பக புற்றுநோய்க்கு வழி வகுக்கும் என்று சொல்வார்கள். ஆனால் இது உண்மையா?

Advertisment

இது குறித்து இன்ஸ்டாகிராமில் தன்னை ஒரு 'மில்லினியல் டாக்டர்' என்று வர்ணிக்கும் டாக்டர் தனயா,  அண்டர்வைடு ப்ராக்களை புற்றுநோயை உண்டாக்கும் என்று நிராகரிக்கும் ஒரு தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

“நீங்கள் விரும்பினால் அண்டர்வைடு ப்ரா அணியலாம், அது உங்களுக்கு மார்பகப் புற்றுநோயைத் ஏற்படுத்தாது. ப்ரா அணிவது, இரவில் ப்ரா அணிவது அல்லது அண்டர் வைர்டு ப்ரா அணிவது ஆகியவை மார்பகப் புற்றுநோயுடன் தொடர்புடையது அல்ல,” என்று கூறியுள்ளார்.

ஆனாலும் அண்டர்வைடு ப்ரா அணியும்போது பெண்கள் அசௌகரியத்தை சந்திக்க நேரிடும் என்றும், அது உடலில் ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். அண்டர்வயர் ப்ராவில்  “வயர் வெளியே குத்தத் தொடங்குவதுதான் ஒரே பிரச்சனை. வலி, அல்லது நீங்கள் பொருத்தமற்ற ப்ரா அணிந்திருந்தாலும் இது உருவாகும்.

Advertisment
Advertisements

பெங்களூரில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையின் அறுவைசிகிச்சை புற்றுநோயியல் ரோபோடிக் மற்றும் லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை துறையின் இயக்குநர் டாக்டர் சந்தீப் நாயக் பி இதனை ஒப்புக்கொண்டார்: ”புற்றுநோய் டிஎன்ஏவில் ஏற்படும் மாற்றங்களால் ஏற்படுகிறது மற்றும் வயது, பரம்பரை காரணங்களால் ஏற்படாது. ஒருவர் ப்ரா அணிவது நோயை உண்டாக்கும் செல்லுலார் மாற்றங்களில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

இந்நிலையில், அண்டர்வைடு ப்ராக்களுக்கும் புற்றுநோய்க்கும் இடையே உள்ள தொடர்பைக் கூறும் தற்போதைய மருத்துவ ஆராய்ச்சி எதுவும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக வெளியாக "முந்தைய ஆராய்ச்சி முடிவில், கீழ்-வயர் உள்ள ப்ரா உடலில் உள் சுருக்கம் மற்றும் நிணநீர் அடைப்பை ஏற்படுத்தியது என்று கருதப்பட்டது, ஆனால் அறிவியல் ஆராய்ச்சி இரண்டிற்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை," என்று அவர் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறியுள்ளார்.

அண்டர்வயர்டு ப்ராக்கள் ஏற்படுத்தக்கூடிய நீண்ட கால உடல்நலக் கேடுகளையும் மறுத்த அவர், "தவறான ப்ராக்கள் சுருக்கத்தையும் உணர்வின்மையையும் ஏற்படுத்தக்கூடும், ஆனால் அவை எந்த உடல்நலப் பிரச்சினைகளுடனும் இணைக்கப்படவில்லை. மக்கள் தாங்கள் விரும்பும் எதையும் அணிந்து சுதந்திரமாக உள்ளனர், ஏனெனில் அது அவர்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் அல்லது நல்வாழ்வை பாதிக்காது, ”என்று அவர் கூறியுள்ளார்.

எந்தவொரு நோயின் வளர்ச்சியிலும், குறிப்பாக புற்றுநோயின் வளர்ச்சியில் எந்த வகையான உள்ளாடைகளும் பங்கு வகிக்காது அல்லது தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Health Tips

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: