நாம் அனைவரும் விரும்பி சாப்பிடும் முக்கிய இனிப்பு வகைகளில் ஒன்று பாயாசம். சேமியா பாயாசம், பருப்பு, தேங்காய்பால், இளநீர் என பல வகைகளில் பாயாசம் செய்யலாம். அனைத்துமே இனிப்புசுவை அதிகமாக இருக்கும். அதேச சமயம் சற்று கசப்பு சுவையுடன் பாயாசம் சாப்பிட்ட அனுபவம் உங்களுக்கு உள்ளதா? இந்த பாயாசம் உடலுக்கு ஆரோக்கியமானதும் கூட.
அதுதான் கற்றாழை பாயாசம். உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் கற்றாழையை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் அதிக நன்கைகள் கிடைக்கும். அதே சமயம் இந்த மாதிரி பாயாசம் செய்தும் சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள் :
கற்றாழை – 2
வெல்லம் (துருவியது) – ஒரு கப்
பால் – 2 கப்
பாசிபருப்பு – ஒரு கப்
ஏலக்காய் (தூள் ஆக்கியது) – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
முந்திரி, திராட்சை, பாதாம் – தலா ஒரு ஸ்பூன்
செய்முறை
முதலில் கற்றாழையை எடுத்து அதன் தோலை சீவி உள்ளே இருக்கும் ஜெல்லை எடுத்து தனியாக வைத்தக்கொள்ளவும். இந்த சதைப்பகுதியை நன்றாக அலசி அதை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். அதன்பிறகு பாசிபரருப்பை நன்றாக கழுவி, குக்கரில் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
அதன்பிறகு: வேகவைத்த பாசி பருப்பில், பால் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து, துருவிய வெல்லம், ஏலக்காய் பொடி, மற்றும் தேவையான அளவு உப்பை சேர்த்துக்கொள்ளவும். வெல்லம் நன்றாக கரைந்ததும், அதில் தாளித்த முந்திரி, திராட்சை, பாதாம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி எடுத்தால், சுவையான கற்றாழை பாயாசம் தயார்.
கற்றாழையின் நன்மைகள்
மலச்சிக்கல் பிரச்சனைக்கு கற்றாழை சிறப்பான நன்மையை கொடுக்கும். அதேபோல் கண்களுக்கான ஆரோக்கியத்தை மேம்படுத்தும் திறன் கற்றாழைக்கு உண்டு. நீரிழிவு நோயாளிகளுக்கு கற்றாழை முக்கிய நன்மைகளை தரும். அதோடு மட்டுமல்லாமல் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் கொண்டது. கற்றாழை தொடர்ந்து சாப்பிடும்போது பல நோய்க்கான தீர்ப்வை பெறலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“