உடல் நலம் சரியாக இருக்க உணவில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். உணவே மருத்து என்ற பழமொழிக்கு ஏற்ப, சத்தான உணவுகளை எடுத்துக்கொண்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. ஆனால் அப்போது மாறி வரும் உணவு முறைகள் காரணமாக பலரும் வயிறு நிறைந்தால் போதும் என்ற மனநிலையிலேயே உணவை எடுத்துக்கொள்கின்றனர்.
இதன் காரணமாக பலரும் இளம் வயதிலேயே பல்வேறு உடல்’ நல பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. இதில் இருந்து தப்பிக்கவும், உடல்நலத்தை பாதுகாகக்வும், உடல் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் பீட்ரூட் தோசை உங்களுக்கு நல்ல பலனை கொடுக்கும். பொதுவாக தினமும் எதாவது ஒரு வேளையாவது தோசை சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கும் இருக்கிறது.
வெறும் தோசை சாப்பிடுவதற்கு பதிலாக இந்த பீட்ரூட் தோசை சாப்பிடுவதால் உடலில் பல நன்மைகள் ஏற்படும்.
தேவையான பொருட்கள்
அரிசி – 3 கப்,
உளுத்தம் பருப்பு – ஒரு கப்,
பீட்ரூட் – 1 முழுதாக
பேக்கிங் சோடா முக்கால் தேக்கரண்டி
சீரகம் – அரை தேக்கரண்டி
மிளகாய் – 2
அசோஃபோடிடா – அரை சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
செய்முறை
அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை நன்றாக சுத்தம் செய்து இரவு முழுவதும் ஊறவைத்து, அடுத்த நாள் இரட்டையும் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு பீட்ரூட்டை துண்டு துண்டுகளாக வெட்டி அதில் கொடுக்கப்பட்ட அளவு சீரகம், மிளகாய் ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக்கொள்ள வேண்டும். இந்த கலவையில் அரிசி உளுத்தப்பருப்பு மாவை சேர்த்து நன்றாக கலக்கவும். சில நிமிடங்கள் கழித்து அடுப்பில் தேசை தவாவை வைத்து சாராணமாக நாம் தோசை ஊற்றுவது போல் ஊற்றி எடுத்தால் பீட்ரூட் தோசை தயார்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் இந்த தோசையில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. பீட்ரூட்டில் உள்ள சத்து உடலில் ரத்தம் ஊறுவதற்கு வழி செய்யும். அதேபோல் ரத்த ஓட்டம் சீராக இருப்பதற்கும் நன்மை செய்யும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“