அழகு என்பது அனைவரும் விரும்பும் ஒன்றாக உள்ளது. ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், மற்றவர்களிடம் தங்களை அழகாக காட்டிக்கொள்ள முகம் மற்றும் உடலுக்கு பலவகையான பொருட்களை பயன்படுத்துகின்றனர். இதில் பெரும்பாலானோர் ரசாயனம் கலந்த செயற்கை கிரீம்களை பயன்படுத்துகின்றனர். முதலில் அழகை கொடுக்கும் இந்த கிரீம்கள் நாளடைவில் பக்கவிளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது.
இதனால் பலரும் தற்போது ரசாயணம் கலக்காத இயற்கை பொருட்களுக்கு மாறி வருகின்றனர். அதற்கு ஏற்றார்போல் சினிமா நட்சத்திரங்கள் மற்றும் அழகுகலை நிபுணர்கள் என பலரும் தங்களது சமூக வலைதள பக்கத்தில் இயற்கை பொருட்களை பயன்படுத்தி முகத்திற்கு அழகு சேர்ப்பது எப்படி? இயற்கை பொருட்களில் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பது தொடர்பான தகவல்களை பகிர்ந்து வருகினறனர்.
அந்த வகையில் தற்போது நடிகை பாக்யாஸ்ரீ முகத்தில், நிறமி மற்றும் முகப்பரு போன்ற தோல் பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க ஒரு எளிய இயற்கை ஹேக்கை பகிர்ந்துள்ளார். இந்த சிகிச்சை்ககாக அவர் பரிந்துரைத்துள்ள இயற்கை பொருள் வாழைப்பழ தோல். வாழைப்பழத்தோல் கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது மற்றும் உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. இது பினோலிக்ஸ் மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகளைக் கொண்டுள்ளது
ஹெல்த்லைன் படி, வாழைப்பழ தோலில், ஆண்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால்,சருமத்தை பளபளப்பாகவும், சுருக்கங்களை குறைக்கவும் உதவுகிறது. இது மாய்ஸ்சரைசராகவும் செயல்பட்டு சருமத்தை ஈரப்பதமாக்க உதவுகிறது. இது தொடர்பாக நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளில், வாழைப்பழத் தோல் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதாகக் கண்டறிந்துள்ளது.
தடிப்புத் தோல் அழற்சியின் போது பாதிக்கப்பட்ட பகுதியில் வாழைப்பழ தோலை தடவுவதன் மூலம் அரிப்பைப் போக்கவும் இதைப் பயன்படுத்தலாம். உங்கள் முகத்தில் வாழைப்பழத் தோலை (வெள்ளை பகுதி) மெதுவாக தேய்த்து சுமார் 15 நிமிடங்கள் இருந்து பின்னர் குளிர்ந்த நீரில் கழுவினால் முகப்பரு பிரச்சனை தீரும் என்று கூறியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil