Tamil health Coconut Update : தேங்காய் நமக்கு எந்தெந்த விதத்தில் பயன் தருகிறது என்று பெரும்பாலும் நாம் யோசித்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் தேங்காயில் உடலுக்கு தேவையான ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளது. தேங்காய் நீர் உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கிறது. இளநீர் அல்சர் பிரச்சனையை தீர்க்கிறது. மன அமைதியை கொடுக்கிறது. உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள் உதவுகிறது.
இளநிரில் இருந்து கிடைக்கும் இளம் தேங்காய் (வழுக்கை) உடலில் ஏற்படும் பல பிரச்சினைகளுக்கு தீர்வு தருகிறது. தேங்காய் உணவில் சேர்த்தும் சாப்பிடலாம். அல்லது அப்படியோ கூட சாப்பிடலாம். ஒரு பயன்படுத்தி செய்த உணவு, நறுமனமாகவும் தனித்தன்மையுடனும் இருக்கும். தேங்காயில் இருந்து கிடைக்கும் தேங்காய் பால், மருத்துவத்தில் முக்கிய நன்மைகள கொடுக்கிறது.
மேலும் இது பல சுவையான சமையல் வகைகளைத் தயாரிக்கவும் பயன்படுகிறது. இப்படி பல நன்மைகளை உள்ளடங்கியுள்ள தேங்காய், எளிதாகக் கிடைக்கக்கூடிய பொருளாக உள்ளது. ஆனால் தேங்காயை உடைப்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல. பெரும்பாலான நேரங்களில், தேங்காய் உடைக்கும்போது வெளிப்புற ஓடு விரிசல் போது நாம் தண்ணீர் மற்றும் தேங்காய் பாதி வீணடிக்கும் நிலை ஏற்படும்..
ஆனால் தேங்காய் உடைத்து ஓட்டில் இருந்து எளிதான தேங்காய் எடுக்க பல எளிய வழிமுறைகள் உள்ளன. மாஸ்டர் செஃப் சஞ்சீவ் கபூர் தனது இன்ஸ்டாகிராமில் இந்த "புதுமையான தேங்காய் ஹேக் முறையை பகிர்ந்துள்ளார்.
தேங்காயை உடைக்க 5 எளிய வழிமுறைகள்,
உலர்ந்த, தேங்காய் அதில் உள்ள அதிகப்படியான மட்டையை உரிக்கவும்.
அடுத்து ஊசி போன்ற கூர்மையான ஒரு கம்பியை எடுத்து தேங்காயின் கண்களில் துளை செய்து, அதில் இருந்து தண்ணீரை வெளியில் எடுக்கவும்.
அதன்பிறகு தேங்காயை இரண்டு பகுதிகளாக உடைக்கவும். உடைத்த இருவேறு பாதி தேங்காயை எரிவாயு (கேஸ்) அடுப்பில் வைத்து, கடினமான வெளிப்புற ஓட்டை சூடாக்கவும்ஃ
சிறிது நேரத்தில் தேங்காய் தனியாக ஓடு தனியாக வந்துவிடும். அந்த தேங்காய் எடுத்து சமையலுக்கும், சாப்பிடுவதற்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“