திருமணத்தின்போது வேலை, படிப்பை விட இந்த விஷயம் இருக்கானு பாருங்க

Tamil Health Update : திருமணம் முடிந்து ஒரு குழந்தை பிறந்தாலும், அந்த பெண்ணின் வாழ்கை மிகுந்த கொடூரமாக இருக்கும். தாம்பத்திய வாழ்ககையில் இவர்களுக்கு எந்த சந்தோஷமும் இருக்காது

Tamil Lifestyle Update : திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்பது பழமொழி. இந்த பழமொழிக்கு ஏற்ப காலம் காலமாக வயது வந்த ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்வது அல்லது பெற்றோர்கள் திருமணம் செய்து வைப்பது போன்ற நடைமுறை நிகழ்வுகள் நடந்து வருகிறது. அந்த காலங்களில் உறவினர்களுக்குள்ளேயே திருமணம் செய்துகொண்டனர். ஆனால் தற்போது காலங்கள் மாறி வரும் நிலையில், இரத்த சொந்தங்களுடன் திருமணம் செய்துகொள்ளும்போது குழந்தை பிறப்பதில் குறைபாடு இருக்கும் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதையும் மீறி சிலர் தங்களது உறவினர் வீட்டு பெண்களுடன் திருமணம் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். இதில் பெரும்பாலான மக்கள் இந்த அறிவியல் உண்மையை புரிந்துகொண்டு உறவினர் அல்லாத திருமணம் என்னும் பெயரில் புதிய உறவினர்களை தேடிச்செல்லும் முயற்சியில் இறங்குகின்றனர். அப்படி செல்பவர்கள் பலரும் ஆணுக்கு படிப்பு நல்ல வேலை, நல்ல சம்பளம் உள்ளதா? அழகாக இருக்கிறாரா என்பதை மட்டுமே பார்த்து இவை சரியாக இருந்தால் அடுத்து திருமணம் என்ற நிலைக்கு சென்று விடுகின்றனர். இதை மட்டுமே பார்த்து திருமணம் செய்துகொண்ட பலரின் வாழ்ககை இன்று கேள்விக்குறியில் நிற்கிறது.

பெருகி வரும் விஞ்ஞான வளர்ச்சியில் மனித இனம் ஓய்வில்லாமல் எதையோ  தேடி ஓடி கொண்டிருக்கிறது. இந்த அவசர உலகத்தில், ஓரினச்சேர்க்கை என்று பல புதிய அதிசயங்களும் அரங்கேறி வருகினறன. இந்த ஓரினச்சேர்க்கை பழங்காலத்தில் நடைமுறையில் இருந்தது என்று பலர் கூறினாலும், சமீப ஆண்டுகளாக இது தொடர்பாக பேச்சுக்கள் மற்றும் விவாதங்கள் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த ஓரினச்சேர்க்கை உறவுமுறையில் உள்ள ஒரு பெண்ணே அல்லது ஆணோ வேறு ஒருவரை திருமணம் செய்துகொள்ளும்போது இருவரின் வாழ்க்கையும் மகிழ்ச்சியில்லாத வாழ்க்கையாக மாறுகிறது.

ஒருவர் பெண் பார்க்க வரும்போது அவரிடம் சொத்து அதிகமாக உள்ளதா, நல்ல வேலை உள்ளதா,? படித்திருக்கிறாரா? தொழில் செய்கிறாரா என்ற பல தகுதிகளை பார்க்கும் போது அவருக்கு, பெண் மீது ஈர்ப்பு இருக்கிறதா என்று தெரிந்துகொள்ள பலரும் தவறிவிடுகின்றனர். இதை தெரிந்துகொள்ளாமல் திருமணம் செய்துகொள்ளும் ஒரு பெண்ணுக்கு அவளின் வாழ்க்கையே நரகமாக மாறிவிடுகிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக மகராஷ்டிராவில் ஒரு பெண் தன் கணவருக்கு தன்னிடம் ஈர்ப்பே இல்லை எங்களுடைய வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை என்றும் அவரது குடும்பம் தன்னை ஏமாற்றிவிட்டதாக புகார் அளித்துள்ளார்.

அதேபோல் பெங்களூருவில் ஒரு பெண் தனது கணவர் ஓரினச்சேர்க்கைளார்களின் செயலியை பயன்படுத்துகிறார் என்று கூறி புகார் அளித்தது மற்றும் உத்திரபிரதேசத்தில் திருமணமான இரண்டு பெண்கள், தங்களது கணவனை விவாகரத்து செய்துவிட்டு இருவரும் ஒன்றாக வாழ்து வருவது என பல உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால் இந்த சம்பத்திற்கு எல்லாம் ஆரம்பப்புள்ளி ஓரினச்சேர்க்கை. ஒரு சில வெளிநாடுகளில் இந்த முறை சட்ப்பூர்வமாக அறிவிக்கப்பட்டாலும் இந்தியாவில் இந்த உறவு சட்டவிரோதமாகவே பார்க்கப்படுகிறது.

இது குறித்து மனோத்தத்துவ மருத்துவர் டாக்டர் கவிதா கூறுகையில்,

இந்தியாவில் ஒரு ஆண் தான் திருமணத்திற்கு தயாராக இல்லை என்பதை உணரும்போது அதை தனது பெற்றோரிடம் சொன்னால் அவர்கள் அதை எப்படி எடுத்தக்கொள்வார்கள் என்றால் இதெல்லாம் ஒரு பிரச்சனை இல்லை. திருமணம் முடிந்து ஒரு குழந்தை பிறந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்லி விடுகின்றனர். ஆனால் அந்த ஆண் தனது பெற்றோரிடம் இதைப்பற்றி சொல்லியிருந்தாலும், சமூகத்தில் தன்னைப்பற்றி என்ன நினைப்பார்கள் என்று பயந்து திருமணம் செய்துகொள்கிறனர்.

திருமணம் முடிந்து ஒரு குழந்தை பிறந்தாலும், அந்த பெண்ணின் வாழ்க்கை மிகுந்த கொடூரமான நிலைக்கு தள்ளப்படுகிறது. தாம்பத்திய வாழ்க்கையில் இவர்களுக்கு எந்த சந்தோஷமும் இருக்காது. இதற்கு அந்த ஆணையும் நாம் குற்றம் சொல்ல முடியாது. என்னிடம் வந்த ஒரு பெண்மணி திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. ஆனால் எங்களது தாம்பத்தியம் சரியாக இல்லை. எனது கணவர் 6 மாதம் அல்லது வாரா வாரம் வேறு எங்கோ சென்றுவிட்டு வருகிறார். அதன்பிறகு அவர் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்று கண்டுபிடித்ததாக கூறினார்.

இது குறித்து அவரது மாமியார் மாமனாரிடம் சொன்ன போது இதெல்லாம் ஒரு பிரச்சனையா உனக்கு ஒரு குழந்தையாகிவிட்டது. என்று கூறியுள்ளனர். இதனால் கணவன் மனைவி அவர்களுக்கு பிறந்த குழந்தை என மூவருமே பாதிக்கப்படுகிறார்கள் என்று கூறியுள்ளார். மேலும் உங்களது மகனோ அல்லது மகளோ தான் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்று உங்களிடம் வந்து சொன்னால் அதை ஏற்றுக்கொள்ளுங்கள். நாம் எப்படி இருக்கிறோமோ அதே மாதிரிதான் அவர்களின் உணர்வுகள். இதை நீங்கள் அடித்தோ அட்வை பண்ணியோ மருத்துவம் பார்த்தோ சரிசெய்துவிடலாம் என்று நினைத்தால் அது அவர்களின்வாழ்கையை சீரழித்துவிடும் என்றும் கூறியுள்ளார்.

ஓரினசேர்க்கையாளர்கள் இப்படி இருப்பதற்கு காரணம என்ன?

சமூக அழுத்தம், பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு சுதந்திரமாக பேசும் வாய்ப்பை கொடுப்பதில்லை. பெற்றோர்கள் பிள்ளைகளிடம் தாம்பத்தியம் குறித்து பேசுவதற்கு அனுமதி கொடுத்தால் மட்டுமே இந்த பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம். பெற்றோர்களே வற்புறுத்தவில்லை என்றாலும் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை என்று நண்பர்கள் கேட்பார்கள் அதற்பு பயந்து பல ஆண்கள் திருமணம் செய்துகொள்கின்றனர். மேலும் தான் ஓரினச்சேர்க்கையாளர் என்பதை வெளியில் சொல்ல தைரியம் இல்லாத ஆண்கள் ஊருக்காக திருமணம் செய்துகொள்கின்றனர். இது அவர்களின் சுயநலத்தை காட்டுகிறது.

அவர்களுக்கு நன்றாக தெரியும் திருமணம் செய்துகொண்டால் ஒரு பெண்ணுக்கு சந்தோஷத்தை கொடுக்க முடியாது என்று தெரிந்தும் ஒரு இப்படி செய்யும்போது அந்த பெண்ணிற்கு துரோகம் செய்துவது போன்தான் அர்த்தம். அதையும்தாண்டி திருமணம் செய்துகொண்டால் அதற்கு அவர்களர் சுயநலம்தான் காரணம் என்று எழுத்தாளது லதா கூறியுள்ளார்.

இது தொடர்பாக பன்னாட்சி நிறுவனம் ஒன்று நடத்திய சர்வேயில் இந்திய மக்கள் தொகையில் 3 சதவீதம் பேர் ஓரினச்சேர்க்கையாளர்களாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி அந்தியாவில் 4.17 கோடிபேர் ஓரினச்சேர்க்கைாளர்களாக உள்ளதாக அந்த புள்ளி விபரம் கூறுகிறது. இதில் இதில் சுமார் 75 சதவீதம் பேர் அதாவது 3.12 கோடிபேர் திருமணம் செய்துகொண்டு ஈர்ப்பே இல்லாத தனது மனைவி அல்லது கணவனுடன் வாழ்ந்து வருகின்றனர்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil lifestyle important thinks for middle age peoples marriage

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com