scorecardresearch

ஐஸ் வாட்டர், நோ உப்பு… ஒரு வாரம் வரை இட்லி மாவு புளிக்காமல் இருக்க இதை ஃபாலோ பண்ணுங்க!

Tamil Health Update : அரிசி மற்றும் உளுந்து மாவு சேர்ந்து அரைக்கும்போது பெரும்பாலும் மொத்தமாக அரைத்து வைத்துவிடும பழக்கம் நம்மில் பலருக்கும் இருக்கும்.  

ஐஸ் வாட்டர், நோ உப்பு… ஒரு வாரம் வரை இட்லி மாவு புளிக்காமல் இருக்க இதை ஃபாலோ பண்ணுங்க!

Tamil Lifestyle Update : இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் பெரும்பாலான வீடுகளில் காலை உணவாக ருசிப்பது இட்லி. இந்தியாவின் பாரம்பரிய உணவு பொருட்களில் ஒன்றான இட்லி மருத்துவ குணங்களை நிறைந்தது. மேலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவாக உள்ளது. ஆனால் இட்லி சமைக்கும்போது கவனமுடன் இருக்க வேண்டியது அவசியமான ஒன்று.

இட்லி சமைக்கும்போது அது சாப்ட்டாக இருக்க வேண்டும். மாறாக கடினமாகவோ அல்லது பாதி மாவாகவே இருந்தால் இட்லி மீதுளள ஆர்வமே குறைந்துவிடும். இந்த நிலை வராமல் இருக்க இட்லிக்கு மாவு அரைக்கும்போதே கவனமுடன் இருக்க வேண்டும். அரிசி மற்றும் உளுந்து மாவு சேர்ந்து அரைக்கும்போது பெரும்பாலும் மொத்தமாக அரைத்து வைத்துவிடும பழக்கம் நம்மில் பலருக்கும் இருக்கும்.  

இப்படி அரைத்து வைக்கும்போது அதிகபட்சமாக 3 நாட்கள் மாவு புளிக்காமல் இருக்கும். ஆனால் 4-வது நாளில் மாவு கட்டாயம் புளிப்புத்தன்மையை எட்டிவிடும். ஆனால் இட்லி தோசை மாவு ஒரு வாரம் வரைக்கும் புளிக்க கூடாது என்றால் ஒரு சில டிப்ஸ்களை பயன்படுத்தலாம்.

இட்லி தோசைக்கு மாவு அரைக்கும்போது அரிசியை 3 முதல் 4 மணி நேரம் மட்டுமே ஊறவைக்க வேண்டும். அதற்கு மேல் அரிசி ஊறினால் மாவு விரைவில் புளிப்புத்தன்மையை எட்டிவிடும். அதேபோல் உளுந்தை ஒரு மணி நேரத்திற்கு மேல் ஊறவைக்கூடாது. அதேபோல் மாவு அரைக்கும்போது அதிக நேரம் அரைக்க கூடாது. மாவு அரைக்கும்போது வேறு எந்த வேலையும் செய்யாமல் மாவு அரைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். இதில் மாவு அதிக நேரம் அரைந்தால் விரைவில் புளித்துவிடும்.

அதேபோல் மாவு அரைக்கும்போது ஐஸ் வாட்டர் பயன்படுத்துவது நல்லது. சிறிதளவு ஐஸ் வாட்டர் ஊற்றிவிட்டு அதன்பிறகு உளுந்ததை ஆட்டினால், உளுந்து பொங்க பொங்க ஆட்ட ஐஸ்வாட்டரை தெளித்துக்கொண்டே இருக்க வேண்டும். இப்படி ஆட்டினால் உபரி அதிகம் கிடைக்கும். அதேபோல் உளுந்தை அரைக்க 25 ல் இருந்து 30 நிமிடங்கள் போதுமானது. இதில் அரைக்கும்போது மாவை தள்ளிவிட கைகளுக்கு பதிலாக மரக்கரண்டி அல்லது பிளாஸ்டிக் கரண்டியை பயன்படுத்தலாம்.

அரிசியை ஆட்டும்போது ஐஸ்வாட்டர் தெளித்து ஆட்டலாம். இதில் அரிசி கொறக்கொறப்பாக அரைப்பட்டிருந்தாலே போதுமானது. அரிசி அரைப்பட்டவுடன் அதில் உளுந்த மாவை சேர்த்து கிரைண்டரிலேயே ஆட்டிவிடுங்கள். அதன்பிறகு அதை வேறு பாத்திரத்திற்கு மாற்றி உப்பு சேர்க்காமல் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்

மாவை பாத்திரத்திற்கு மாற்றியபின் இட்லிக்கு மட்டும் தனியாக எடுத்து வைத்துககொண்டு மீதமுள்ள மாவை உப்பு சேர்க்காமல் ப்ரிட்ஜில் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். இட்லிக்கு தனியாக எடுத்த மாவில் உப்பு சேர்த்து பயனபடுத்திக்கொள்ளலாம். பயன்படுத்திய பிறகு மீதமுள்ள மாவை வெளியில் 3 மணி நேரம் வைத்திருந்து அதன்பின் ப்ரிட்ஜில் வைப்பது நல்லது.

மீண்டும் காலையில், நீங்கள் இட்லி சுடுவதற்கு மாவு தேவையான பதத்திற்கு புளித்திருக்கும். இப்படி செய்யும்போது ஒருவாரம் ஆனாலும் பிரிட்ஜில் இருக்கும். உப்பு கலக்காத மாவை தேவைக்கேற்ப பயன்படுத்திக்கொள்ளலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Tamil lifestyle making easy way of idly mavu making style