Tamil Health Update : இந்தியாவில் சமையலறையில் பயன்படுத்தப்படும் மசாலா பொருட்களுக்கு மனிதனுக்கு ஏற்படும் பல நோய்களை கட்டுப்படுத்தும் திறன் உள்ளது. மேலும் இது அமிலத்தன்மை மற்றும் வீக்கம் முதல் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி வரை பல பிரச்சினைகளைக் தீர்க்க சிறப்பான நன்மையை கொடுக்கிறது. வளர்சிதை மாற்றத்தில் சிக்கல் மற்றும் ஒழுங்கற்ற குடல் அசைவுகளை அனுபவிக்கும் அனைவருக்கும், வீட்டில் உள்ள பொருட்களைவைத்து எளிய வீட்டு வைத்தியத்தை செய்வது எப்படி என்பதை மலைக்கா அரோரா சத்தியம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
உங்கள் சமையலறையில் எளிதில் கிடைக்கும், வெந்தய விதைகள் (மெத்தி தானா) மற்றும் சீரகம் (ஜீரா) ஆகியவை ஒருவரின் செரிமான ஆரோக்கியத்திற்கு சிறந்தது என்று அரோரா பரிந்துரைத்துள்ளார்.
இதை எப்படி செய்ய வேண்டும்?
தேவையான பொருட்கள்
வெந்தய விதைகள் - 1 குவிய தேக்கரண்டி -
சீரகம் - 1 குவிய தேக்கரண்டி -
தண்ணீர்
கண்ணாடி குடுவை - 1
செய்முறை
விதைகளை தண்ணீரில் போட்டு ஒரே இரவில் ஊறவைக்கவும். மறுநாள் காலையில், கலவையை வடிகட்டி தண்ணீர் குடிக்கவும்.
இந்த கலவை தரும் பயன்கள் :
வெந்தய விதைகள் (மெத்தி தானா) மற்றும் சீரக விதைகள் (ஜீரா) அற்புதமான ஆரோக்கிய நன்மைகள் மற்றும் குடல் நோய்களை குணப்படுத்தும் பண்புகளை கொண்டது. இரவில் தண்ணீரில் ஊறவைத்து காலையில் குடிப்பது உங்கள் உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது மற்றும் உங்கள் குடல் இயக்கத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் செரிமான பிரச்சனைகளுக்கு எதிராக போராட உதவுகிறது.
மெத்தி விதைகள் நீரிழிவு நோயாளிகளுக்கும் ஒரு சிறந்த தீர்வாகும், அது எப்படி நடக்கிறது? வெந்தய விதை குடல் இயக்கத்தை மேம்படுத்தும் ஒரு ஆன்டிசிட் என்றாலும், சீரகம் என்சைம்களை சுரக்கிறது, இது உடலில் உள்ள சர்க்கரைகள், கொழுப்புகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை உடைத்து குடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது என அரோரா கூறியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil