Pure Honey Test In Home : சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நன்மை தரும் முக்கிய உணவுகளில் ஒன்று தேன். இயற்கையில் கிடைக்கும் முக்கிய இனிப்பு உணவான தேன் பல ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. இரத்த கொழுப்பை கட்டுப்படுத்துவது, இதய மற்றும் புற்று நோய் அபாயத்தை தடுப்பது போன்ற பல நோய்களுக்கு தென் முக்கிய மருத்துவ பொருளாக பயன்படுகிறது. மேலும் இதனை எலுமிச்சை பால் போன்ற இதர உணவுகளுடன் சேர்த்து சாப்பிடும்போது கூடுதல் சுவையுடன் பல ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது.
Advertisment
ஆனால் கடைகளில் விற்கப்படும் தேன்களில் அனைத்து உண்மையான தேன் என்று சொல்ல முடியாத அளவுக்கு பல கலப்படமான தேன் பாட்டில்கள் விற்கப்படுகின்றன. இதனை வாங்கி சாப்பிடும் போது பல வித பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. இது தொடர்பாக அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (சிஎஸ்இ) நடத்திய விசாரணையில், சில முக்கிய பிராண்டுகளால் விற்கப்படும் தேன் கலப்படமானது என்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்த பிராண்டுகளின் தேன் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்றும், இதில் சர்க்கரை பாகு சேர்க்கப்பட்டு இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது என்றும் சிஎஸ்இ குறிப்பிட்டுள்ளது. தூய தேன் கொழுப்புகள் மற்றும் கொலஸ்ட்ரால் இல்லாமல் ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. மேலும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. ஆனால் கலப்படமான தேன் மனித ஆரோக்கியத்தில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும்.
இது உடல் பருமனைத் தூண்டலாம் அல்லது இரத்த குளுக்கோஸ் அளவை அதிகரிக்கலாம், என்று ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, அடுத்த முறை நீங்கள் தேனை வாங்கும்போது, அதில் சர்க்கரையுடன் கலப்படம் உள்ளதா என்பதை எப்படி சரிபார்க்க முடியும். இது குறித்து இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) பரிந்துரைத்த எளிய வீட்டு சோதனை குறித்து தெரிவித்துள்ளது.
ஒரு கிளாஸில் சிறிது தண்ணீர் ஊற்றவும்.
இதற்கு, சில துளிகள் தேன் சேர்க்கவும்.
தேன் முழுமையாக நீரின் கீழே இறங்கினால் அது கலப்படம் ஆகாது. ஆனால் தேன் தண்ணீரில் சிதறி மிதந்தால் அது கலப்படமான தேன் என்பது உறுதியாகும் என்று குறிப்பிட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil