Tamil Recipe kambu Dosai Update : பண்டை கால உணகளில் அதிக சத்துகள் நிறைந்தவைகளில் ஒன்று கம்பு. தினை வகைகளில் ஒன்றான கம்பு அதிக ஆரேக்கிய நன்மைகளை கொடுக்கிறது. பழங்காலத்தில் அரிசி கிடைக்காத தருணத்தில் கம்பு ஒரு முக்கிய உணவாக பயள்படுத்தப்பட்டது. இப்போதும் கூட கிராமங்கள் மட்டுமல்லாது நகரங்களிலும் பலரும் முக்கிய உணவாக பயன்படுகிறது. கம்பை பயன்படுத்தி கூழ், கஞ்சி தோசை என பல உணவு பொருட்கள் தயார் செய்யலாம். நீரிழிவு நோய்களுக்கு கூழ் முக்கிய உணவாக பயன்படுகிறது.
தற்போது கம்பு பயன்படுத்தி தோசை செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் காணலாம்
தேவையான பொருட்கள் :
கம்பு மாவு – 75 கிராம்
கோதுமை மாவு – 2 டேபிள் ஸ்பூன்
பச்சரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன்
தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் -2
கறிவேப்பிலை கொத்தமல்லி சிறிதளவு
செய்முறை :
முதலில் கம்பு மாவு, கோதுமை மாவு மற்றும் அரிசிமாவை ஒன்றாக கலந்துஅதில் பச்சை மிளகாய் வெங்காயம், கறிவேப்பிலை கொத்தமல்லி, தயிர் ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவு உப்பு கலந்து கரைத்து தோசை கல்லில் ஊற்றி எடுத்தால் சுவையான கம்பு தோவை தயார்.
இதில் தயிருக்கு பதிலாக புளித்த இட்லி மாவும் சேர்த்துக்கொள்ளலாம். வெங்காயம் கறிவேப்பிலை மல்லி, ஆகியவைற்றை சேர்க்காமலும் தோசை செய்யலாம். இவை இரண்டுமே அதிக ஆரோக்கியத்தை கொடுக்கும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil