Sun TV Serial News : சன் டிவியில் 3 வருடமாக ஒளிபரப்பான சீரியல் தான் தெய்வமகள். இந்த தொடர் குடும்ப பெண்கள் அனைவராலும் விரும்பி பார்க்கப்பட்டது. இந்த சீரியலில் அன்னியார் என்னும் கதாபாத்திரத்தை யாராலும் மறக்க முடியாது. நடிகை ரேகா கிருஷ்ணப்பா தான் அது. தெய்வமகள் சீரியல் மூலம், வில்லி காயத்ரியாக தமிழ் சீரியல் உலகிற்கு அறிமுகம் ஆனார் அவர். அவரது நடிப்பு நாளுக்கு நாள் மெருகேறி அண்ணியார் இல்லை என்றால் சீரியலே இல்லை, என்று ரசிகர்கள் கூறும் அளவிற்கு நடித்தார்.
க்ளோயிங் தமன்னா, ஸ்டன்னிங் அனுபமா : படத்தொகுப்பு
போலீஸ் கெட்-அப், இரட்டை வேடம் என்று ரசிகர்களுக்கு டபுள் விருந்து கொடுத்து வந்தார். அவருக்காக அண்ணியார் காயத்ரி ரசிகர் மன்றம் எல்லாம் ஆரம்பிக்கப்பட்டது. சன் டிவியில் 1500 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பாகி வந்த தெய்வமகள் சீரியல் ஒருவழியாக முடிந்தது. அண்ணியார் செத்து போயிட்டாங்களே என்று ரசிகர்கள் கவலைப்பட்டனர். ஆனால் நான் மறுபிறவி எடுப்பேன் என்று சொல்லாமல் சொன்னார் ரேகா.
பின்னர் நந்தினி என்ற பாம்பு சீரியலில் சாமியார் மாதவியாக பறந்து பறந்து நடித்தார். அடடா இதோ வந்துட்டாங்க எங்க அண்ணியார் என்று கொண்டாடி மீம்ஸ் போட்டனர் ரசிகர்கள். ஆனாலும் என்ன நந்தினியில் ஏகப்பட்ட வில்லிகள் இருப்பதால் இன்னும் தன்னுடைய பங்கு நடிப்பை ரேகாவால் சரியாக காண்பிக்க முடியவில்லை. ஜிகு ஜிகு புடவை கட்டி, நெற்றி நிறைய பொட்டு வைத்து நிஜ சாமியாராகவே மாறி விட்டார் ரேகா கிருஷ்ணப்பா. கருநாகமாக எல்லாம் மாறி படமெடுத்து ஆடுகிறார்.
இனி அப்ரிடியுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை – யுவராஜ், ஹர்பஜன் முடிவு
கர்நாடகாவைச் சேர்ந்த ரேகா முதன் முதலில் கன்னட சீரியல்களில் தான் நடிக்கத் துவங்கினார். ஆனால் தமிழ் ரசிகர்கள் அவர் எதிர்பார்க்காத வரவேற்பை தந்தனர். ரேகாவின் மகள் பூஜா கல்லூரி செல்ல ஆயத்தமாகி வருகிறார். படப்பிடிப்புக்காக கர்நாடகாவுக்கும், சென்னைக்கும் பறந்துக் கொண்டிருந்த ரேகா, தற்போது குடும்பத்தினருடன் தனது நேரத்தை செலவிட்டு மகிழ்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”