’செம்பருத்தி’ ஜனனி : சினிமா அறிமுகம் கேட்டா... அசந்து போய்டுவீங்க!

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான ’நண்பேன்டா’ படத்தில் நயன்தாராவின் தோழியாக நடித்திருந்தார் ஜனனி.

Janani Ashok Kumar : வெள்ளித்திரைக்கு இணையாக சின்னத்திரை நடிகர் நடிகைகளுக்கும் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. அதில் நடிகை ஜனனி அசோக் குமாரும் ஒருவர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘மாப்பிள்ளை தொடரில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இல்லத்தரசிகள் மத்தியில் பிரபலமடைந்தார்.  கோயம்புத்தூரை பூர்விகமாகக் கொண்ட இவர் முதல் சீரியலிலேயே பட்டையைக் கிளப்பினார்.

லத்திகளை சானிடைஸ் செய்யும் போலீஸார் : வைரலாகும் வீடியோ

அந்த சீரியலில் முத்தக் காட்சியில் நடித்து பரபரப்பையும் ஏற்படுத்தினார். ஆனால் ஜனனி முதலில் அறிமுகமானது என்னவோ சினிமாவில் தான். நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான ’நண்பேன்டா’ படத்தில் நயன்தாராவின் தோழியாக நடித்திருந்தார் ஜனனி. இருப்பினும் அவரை கவனிக்க வைத்தது என்னவோ, விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ‘மாப்பிள்ளை’ தொடர் தான். தற்போது ’செம்பருத்தி’, ’ஆயுத எழுத்து’ ஆகிய சீரியல்களில் நடித்து வருகிறார். சமூக வளைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஜனனி அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.

சீரியல்களில் சேலையில் தோன்றும் ஜனனி இன்ஸ்டாகிராம் பக்கம் முழுவதும் மார்டன் உடைகளில் ஜொலிக்கிறார். தவிர இவர் ஒரு மேக்கப் ஆர்டிஸ்டும் கூட. அதோடு ஃபேஷன் டிஸைனிங்கும் செய்து வருகிறார். ஓய்வு நேரத்தில் கேக், குக்கீஸ் போன்ற பேக்கிங் ஐட்டங்களை செய்து அசத்துவதில் வல்லவர்.

நியூயார்க் சென்று திரும்பிய ஹவாய் அழகிக்கு கொரோனா… அரசிடம் முக்கிய வேண்டுகோள்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close