லத்திகளை சானிடைஸ் செய்யும் போலீஸார் : வைரலாகும் வீடியோ

இந்த உத்தரவுகளை மீறினால் 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ .1,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

lathi sanitizing video
lathi sanitizing video

Corona Virus : கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவாமல் தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. இதனை சரி வர கவனிக்கும் பணியில் நாடு முழுவதும், காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். தங்களது கடமை குறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் பகிர்ந்து கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Corona Updates Live : கொரோனாவால் ஒரே நாளில் உலகம் முழுவதும் 2000-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

ஐபிஎஸ் அதிகாரி பங்கஜ் ஜெயின் ஒரு வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். லாக் டவுனை செயல்படுத்த “முழுமையாக ரெடி” என்று குறிப்பிட்டுள்ளார். அப்போது ஒரு போலீஸ்காரர் கிருமிநாசினியை தடியடிகளில் தெளிப்பதைக் காணலாம். பஞ்சாப் அதிகாரி பகிர்ந்த மற்றொரு வீடியோவில், லாக் டவுன் விதிமுறைகளை மீறியவர்களை பஞ்சாப் காவல்துறை எவ்வாறு தண்டிக்கிறது என்பதும் உள்ளடங்கியுள்ளது. விதிமுறைகளை மீறி வெளியில் சுற்றி திரிந்த நபர்களை நடு ரோட்டில் குப்புற படுக்க வைத்து தண்டனை அளித்திருக்கிறார்கள். இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இதற்கான சில ரியாக்‌ஷன்களை இங்கே குறிப்பிடுகிறோம்…

9 நாட்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கிடு கிடு – தேவை மருத்துவ கட்டமைப்பில் அதிக முக்கியத்துவம்

கோவிட் -19 பரிமாற்ற சங்கிலியை உடைக்க மாநிலங்கள் எல்லை கதவுகளை மூடியுள்ள நிலையில், விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது. 1897-ஆம் ஆண்டின் தொற்றுநோய்கள் சட்டம், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 188-ன் படி இந்த தண்டனை விதிக்கப்படும். இந்த உத்தரவுகளை மீறினால் 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ .1,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை இப்போது 560-ஐ தாண்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Police sanitizing lathis for lockdown india social media viral

Next Story
ரஷ்யாவில் சிங்கங்களை உலவவிட்டாரா புதின்? என்னமா யோசிக்கிறாங்க…lions on Russian streets, Vladimir Putin has not ordered drop lions on russian streets,ரஷ்ய தெருக்களில் சிங்கங்களை விட்ட புதின், ரஷ்யா, கொரோனா வைரஸ், கொரோனா வதந்தி, ரஷ்யாவில் சிங்கங்கள், russia lions, russia streets lions, coronavirus, covid-19, corona fake news, coronavirus latest news, coronavirus latest updates
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com