Kavitha Solairaja : தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் நீண்ட வருடங்களாக பிஸியாக நடித்து கொண்டிருப்பவர் கவிதா சோலைராஜா. 'கல்யாணம் முதல் காதல் வரை' (கவிதா பாலா), 'வள்ளி' (கீதா), 'நீலி' (டாக்டர் லட்சுமி), 'வேலுநாச்சி' (சுகந்தி), 'அவளும் நானும்'(கவிதா), ஆனந்தம், உறவுகள் மற்றும் சங்கமம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.
உதவிக்கரம் நீட்டுவாரா தல அஜித் – தீப்பெட்டி கணேசன் எதிர்பார்ப்பு
திரைப்படங்களிலும் நடித்துள்ள கவிதா, தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘நிலா’ சீரியலில் நடித்து வருகிறார். அவரை ’நிலா’ கவிதா என்றும் சீரியல் வட்டாரத்தில் அழைக்கிறார்கள்.
கவிதா சோலைராஜா 1983 ஆம் ஆண்டு, சேலத்தில் பிறந்தார். தற்போது சென்னையில் வசித்து வருகிறார். தனது பள்ளிக் கல்வியை சேலத்தில் உள்ள கே.எம்.ஹெச்.எஸ்.எஸ். பள்ளியில் படித்தார். சன் டிவி-யில் ஒளிபரப்பான ‘ஆனந்தம்’ சீரியலில் மூலம் தனது தொலைக்காட்சி பயணத்தைத் தொடங்கினார். அப்போதிலிருந்து பல தொடர்களில் நடித்து வருகிறார். தற்போது சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘நிலா’ சீரியலில் ரேவதி என்ற சப்போர்ட்டிங் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
நல்ல உயரம், நீண்ட கூந்தல் ஆகிய தோற்றத்தைக் கொண்ட, கவிதாவுக்கு தோளுக்கு மேல் வளர்ந்த மகளும் உள்ளார். ஷூட்டிங் இல்லாத நாட்களில் கணவர் சோலைராஜாவுடனும், மகள் ரேயாவுடனும் நேரம் செலவிடுவது தான் கவிதாவுக்கு பிடித்த விஷயமாம். அதோடு விதவிதமாக சமையல் செய்வது, வீட்டுத் தோட்டத்தை பராமரிப்பது என வீட்டிலும் தன்னை பிஸியாக வைத்துக் கொள்வாராம்.
கேரளாவில் கொரோனா கட்டுப்படுத்தப்படுவதன் பின்னணி – வலுவான சுகாதார அமைப்பு
தவிர கலர்ஃபுல்லாக புகைப்படங்களை எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார் கவிதா.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”